'போக்சோ' வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்'
திருவாரூர்: போக்சோ வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு, திருவாரூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், வேளூரை சேர்ந்த, 17 வயது சிறுமி, பிளஸ் 1 படித்து வந்தார்.
அவருக்கும், திருவண்ணாமலையை சேர்ந்த செல்வம், 30, என்பவருக்கும் ஏற்பட்ட பழக்கத்தில் 2017 ஆக., 5ல் மாணவி கர்ப்பமடைந்தார். பின், இருவருக்கும், செல்வம் உறவினர்கள் திருமணம் செய்து வைத்தனர்.
புகாரில், திருவாரூர் போலீஸ் ஸ்டேஷனில், செல்வம் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. வழக்கு பதிவு செய்த சப் - இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், தற்போது, சீர்காழியில் இன்ஸ்பெக்டராக பணிபுரிகிறார்.
திருவாரூர் மகிளா கோர்ட்டில் நடக்கும் இந்த வழக்கில், சாட்சி கூற, கமல்ராஜுக்கு, 15 முறை சம்மன் அனுப்பியும், அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.
இதையடுத்து, நீதிபதி சரத்ராஜ், ஆஜராகாத கமல்ராஜுக்கு, நேற்று, பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.
மேலும்
-
சவுதிக்கு போர் விமானங்களை விற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்
-
நகராட்சிக்கு கட்டணம் செலுத்தியும் இடம் தர மறுப்பதாக சாலையோர வியாபாரிகள் புகார்
-
பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்
-
இளைஞர்களுக்கு கலாசாரத்தை கற்பித்து இந்தியாவின் மகிமையை மீட்டெடுக்க வேண்டும் : கடற்படை தலைவர் சதீஷ் ஷெனாய் பேச்சு
-
தேவையுள்ள இடங்களில் கல்லறைகள் கபர்ஸ்தான் அமைக்கப்படும் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் பேட்டி
-
கோயில்களில் சிவராத்திரி பூஜை