டில்லி கார் குண்டு வெடிப்பு பயங்கரவாதி சென்னையில் தங்கினாரா என விசாரணை
சென்னை: டில்லியில், தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி உமர் நபி, சென்னையில் உள்ள பண்ணை வீடுகளில், தன் கூட்டாளிகளுடன் தங்கி சென்றாரா என, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
டில்லி செங்கோட்டை அருகே, கடந்த, 10ம் தேதி பயங்கரவாதி உமர் நபி, காரில் வெடி பொருட்களை எடுத்து சென்று வெடிக்க வைத்தார். இதில், அவரும், அப்பாவிகள், 14 பேரும் பலியாகினர். இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இவர்கள், டில்லியில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கும், கோவையில், கடந்த 2022ல், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த, கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என, விசாரித்து வருகின்றனர்.
இக்குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 17 பேரையும், கேரள சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அசாருதீனையும், விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே பயங்கரவாதி உமர் நபி, அக்டோபரில் சென்னையில் உள்ள பண்ணை வீடுகளில், கூட்டாளிகளுடன் தங்கி சென்றதாக, என்.ஐ.ஏ., அதிகாரிகளுக்கு தகவல்கள் கிடைத்து உள்ளன. அதன் அ டிப்படையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்.ஐ.ஏ., அதிகாரிகள் கூறுகையில், 'இலங்கையில், 2019ல், ஈஸ்டர் நாளில் தொடர் குண்டு வெடிப்பு நடத்திய சஹ்ரான் ஹாசிம், சென்னை மண்ணடி மற்றும் கோவைக்கு வந்து சென்றார்.
'உமர் நபியும் தன் கூட்டாளிகளுடன் தமிழகம் வந்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசா ரணை நடக்கிறது' என்றனர்.
மேலும்
-
சவுதிக்கு போர் விமானங்களை விற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்
-
நகராட்சிக்கு கட்டணம் செலுத்தியும் இடம் தர மறுப்பதாக சாலையோர வியாபாரிகள் புகார்
-
பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்
-
இளைஞர்களுக்கு கலாசாரத்தை கற்பித்து இந்தியாவின் மகிமையை மீட்டெடுக்க வேண்டும் : கடற்படை தலைவர் சதீஷ் ஷெனாய் பேச்சு
-
தேவையுள்ள இடங்களில் கல்லறைகள் கபர்ஸ்தான் அமைக்கப்படும் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் பேட்டி
-
கோயில்களில் சிவராத்திரி பூஜை