ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளியை சேர்ந்தவர் மலர், 60. இவர், ஒரு மாதத்திற்கு முன், வயது முதிர்வு காரணமாக இறந்தார்.
இயற்கை மரணம் அடைந்த நபருக்கு, ஈமச்சடங்கு செலவிற்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 25,000 ரூபாய் பெறுவதற்கு, மலரின் மகன் சேகர், 40, நாட்றம்பள்ளி தனி தாசில்தார் வள்ளியம்மாளை அணுகினார். அதற்கு அவர், 3,000 ரூபாய் லஞ்சமாக கேட்டார்.
இது குறித்து திருப்பத்துார் லஞ்ச ஒழிப்பு போலீசில் சேகர் புகார் செய்தார்.
நேற்று காலை, 11:00 மணியளவில், நாட்றம்பள்ளி தாசில்தார் அலுவலகத்தில், வள்ளியம்மாளிடம், சேகர், 2,000 ரூபாய் லஞ்ச பணத்தை கொடுத்தார். அதை அவர் பெற்றபோது, மறைந்திருந்த போலீசார், வள்ளியம்மாளை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சவுதிக்கு போர் விமானங்களை விற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்
-
நகராட்சிக்கு கட்டணம் செலுத்தியும் இடம் தர மறுப்பதாக சாலையோர வியாபாரிகள் புகார்
-
பரமக்குடியில் வ.உ.சி., 89வது நினைவு தினம்
-
இளைஞர்களுக்கு கலாசாரத்தை கற்பித்து இந்தியாவின் மகிமையை மீட்டெடுக்க வேண்டும் : கடற்படை தலைவர் சதீஷ் ஷெனாய் பேச்சு
-
தேவையுள்ள இடங்களில் கல்லறைகள் கபர்ஸ்தான் அமைக்கப்படும் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அருண் பேட்டி
-
கோயில்களில் சிவராத்திரி பூஜை
Advertisement
Advertisement