மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்

தேனி: தேனி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட தேனி, ராசிங்காபுரம், போடி துணை மின் நிலைய பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடந்தது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் சண்முகா முன்னிலை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் பங்கேற்றனர். முகாமில் 5 நுகர்வோர்கள் மனு அளித்தனர்.

அதில் மின்கட்டண விகிதம் மாறியுள்ளதாக தெரிவித்த புகாருக்கு உடனே நிவர்த்தி செய்திட மேற்பார்வை பொறியாளர் உத்தரவிட்டார். மீதியுள்ள 4 மனுக்கள் மீது விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

Advertisement