கல் குவாரி லாரிகள் சிறைபிடிப்பு

திருமங்கலம்: கள்ளிக்குடி தாலுகா திருமால் கிராமத்தில் 5 க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வருகிறது. இவற்றால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் குறைந்து விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி திருமால், புதுார், மொச்சிகுளம், தும்பக்குளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திருமால் கிராமத்தின் வழியாக அதிக அளவில் கல் மற்றும் மண் லோடுகளை ஏற்றி வந்த மூன்று லாரிகளை திருமால், பாறைக்குளம் ரோட்டில் கிராம மக்கள் சிறை பிடித்தனர். அவர்களிடம் கூடக்கோவில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி லாரிகளை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். பொதுமக்கள் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து கலந்து சென்றனர்.

Advertisement