அஸ்மிதா லீக் தடகளம்: சென்னையில் துவக்கம்

சென்னை: மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய தடகள சங்கம் மற்றும் சென்னை தடகள சங்கம் இணைந்து, 'அஸ்மிதா லீக்' தடகளப் போட்டியை, இன்று சென்னையில் நடத்துகின்றன. பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில், போட்டிகள் நடக்கின்றன. இதில், 14 - 16 வயதுக்கு உட்பட்டோர் மட்டுமே பங்கேற்க முடியும்.



ஓட்டப்பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன. சென்னை மாவட்டத்தில் ஒலிம்பிக் கனவுடன் செயல்படும் ஒவ்வொரு வீரர் - வீராங்கனையருக்கும், பாதை அமைத்து தரும் வகையில் போட்டிகள் நடக்கின்றன என, சென்னை மாவட்ட தடகள சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement