மாநில வில் வித்தை சென்னை வீராங்கனை தங்கம்
சென்னை: தமிழ்நாடு வில் வித்தை சங்கம் சார்பில், மாநில அளவிலான வில் வித்தை சாம்பியன்ஷிப் போட்டி, சென்னையில் உள்ள ஸ்ரீசாய்ராம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. இதில், மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களைச் சார்ந்த, 80-க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.
இதன் மகளிர் சீனியர் காம்பவுண்ட் பிரிவில், மேடவாக்கத்தைச் சேர்ந்த நேஹாஸ்ரீ, 15; அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். மேலும், இதே போட்டியில் நடந்த தேசிய போட்டிக்கான தகுதிச்சுற்றின் சீனியர் மற்றும் ஜூனியர் காம்பவுண்ட் பிரிவுகளில் முதலிடம் பிடித்து, தேசிய போட்டியில் தமிழக அணிக்காகப் போட்டியிடும் தகுதியையும் பெற்றுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
-
கோவிலில் வகுப்பு நடக்கும் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
-
டில்லி கார் குண்டு வெடிப்பு பயங்கரவாதி சென்னையில் தங்கினாரா என விசாரணை
-
'போக்சோ' வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்'
-
மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்
-
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் டிசம்பரில் முதற்கட்ட ஆய்வு
Advertisement
Advertisement