தேசிய மகளிர் கால்பந்து தமிழக அணி அபாரம்
சென்னை: ஆந்திரா மாநிலத்தில் நடைபெறும் தேசிய மகளிர் ஜூனியர் கால்பந்து போட்டியில், தமிழக அணி, 12 கோல்கள் அடித்து அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
அகில இந்திய கால்பந்து சங்கம் மற்றும் ஆந்திரா மாநில கால்பந்து சங்கம் இணைந்து, மகளிருக்கான தேசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் டியர் - 1 போட்டி, ஆந்திரா மாநிலத்தின் அனந்தபூரில் நேற்று துவங்கின.
இதில், நாட்டின் 16 மாநில அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் 'ஏ' பிரிவில், ஆந்திரா, ராஜஸ்தான், அருணாசலப் பிரதேசம் அணிகளுடன் தமிழ்நாடு அணியும் இடம்பெற்றுள்ளது. தமிழக அணி, தனது முதல் போட்டியில், ஆந்திரப் பிரதேச அணியை எதிர்கொண்டது. முதல் போட்டி என்பதால், இரு அணிகளும் கூடுதல் கவனத்துடன் விளையாடின.
96 நிமிடங்கள் நடந்த போட்டியில், தமிழக அணி தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, போட்டி முடிவில், 12 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்தது.
தமிழக அணிக்காக நயானா, தர்ஷினி, பிரபா ஆகியோர், தலா மூன்று கோல்கள் அடித்து அசத்தினர். அன்விடா இரண்டு கோல்கள் அடித்து அணிக்கு உதவி செய்தார்.
மேலும்
-
'போக்சோ' வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்'
-
மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்
-
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் டிசம்பரில் முதற்கட்ட ஆய்வு
-
நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளருக்கு பிடிவாரன்ட்
-
ரேஷன் கடைகளில் 'சானிட்டரி நாப்கின்' மானிய விலையில் வழங்க கோரி வழக்கு; அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
-
நெல் கொள்முதல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்