நகராட்சி கமிஷனர், சுகாதார ஆய்வாளருக்கு  பிடிவாரன்ட்

தேனி: கூடலுார் நகராட்சியில் நவீன எரிவாயு தகன மேடை ஒப்பந்த அடப்படையில் நடந்து வருகிறது. இதன் பணிகளில் தொய்வு ஏற்பட்டதால், நகராட்சி சார்பில் மறு ஏல ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் துவங்கின. இதில் ஏற்பட்ட குளறுபடிகள், பாதிப்பிற்கு தீர்வு வழங்க வலியுறுத்தி ஏற்கனவே ஒப்பந்தம் பெற்ற ஒப்பந்ததாரர் கூடலுாரை சேர்ந்த மலைச்சாமி தேனி நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு வேண்டி மனு அளித்தார். நிரந்தர மக்கள் நீதிமன்றம் மனுவை விசாரணைக்கு ஏற்று நேற்று (நவ.18ல்) ஆஜராக ஏற்கனவே நகராட்சி கமிஷனர் முத்துலட்சுமி, சுகாதாரஆய்வாளர் விவேக் ஆகியோருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் நேற்று ஆஜராகாமல், எவ்வித விளக்கமும் அளிக்காமல் இருந்ததால்,இருவருக்கும் பிடிவாரன்ட் பிறப்பித்து நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் ராஜினி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement