தொழிலாளியை தாக்கிய நான்கு பேர் சிக்கினர்
பொதட்டூர்பேட்டை: நவ. 19--: கரும்பு வெட்டும் தொழிலாளியை தாக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.: பொதட்டூர்பேட்டை அடுத்த மேலப்பூடியில், ஆந்திர மாநிலம், விசாகபட்டணத்தைச் சேர்ந்த லாவாராஜி, 37, என்பவர் கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மேலப்பூடியைச் சேர்ந்த டில்லிராஜ், 25, கவிராஜ், 25, மற்றும் பெங்களூருவைச் சேரந்த சுஜித்குமார், 26, தீனதயாளன், 32, ஆகியோர், லாவாராஜிடம் தகராறில் ஈடுபட்டு, லாவாராஜியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில், படுகாயமடைந்த லாவாராஜி, பொதட்டூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்கு பதிந்த பொதட்டூர்பேட்டை போலீசார், டில்லிராஜ், கவிராஜ், சுஜித்குமார், தீனதயாளன் ஆகியோரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
-
கோவிலில் வகுப்பு நடக்கும் பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
-
டில்லி கார் குண்டு வெடிப்பு பயங்கரவாதி சென்னையில் தங்கினாரா என விசாரணை
-
'போக்சோ' வழக்கில் ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு 'பிடிவாரன்ட்'
-
மின் நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம்
-
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் டிசம்பரில் முதற்கட்ட ஆய்வு
Advertisement
Advertisement