உள்கட்டமைப்பு நிறுவனத்தை கையகப்படுத்திய அதானி குழுமம்
புதுடில்லி: அதானி கனெக்ஸ் நிறுவனம், 'டிரேட் கேஸ்டில் டெக் பார்க்' எனும் உள் கட்டமைப்பு நிறுவனத்தை 231.34 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி டிரேட் கேஸ்டில், ஸ்ரீ நமன் டெவலப்பர்ஸ், ஜெயேஷ் ஷா ஆகிய டிரேட் கேஸ்டில் நிறுவனத்தின் பங்குதார்களிடமிருந்து டிரேட் கேஸ்டிலின் 100 சதவீத பங்குகளும் கைமாறுகின்றன.
அதானி குழுமம் மற்றும் எட்ஜ் கனெக்ஸ் எனும் டேட்டா சென்டர் நிறுவனம் கூட்டு சேர்ந்து, சரி பாதி பங்குகள் அடிப்படை யில் அதானி கனெக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகின்றன. அடுத்த 10 ஆண்டு களில் ஒரு ஜிகாவாட் திறன் கொண்ட தேசிய டேட்டா சென்டரை உருவாக்க அதானி கனெக்ஸ் திட்டமிட்டிருக்கிறது.
இந்நிலையில் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதற்காக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதானி குழுமம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சாலையோர பள்ளத்தால் மணியாட்சியில் விபத்து அபாயம்
-
வெங்கச்சேரியில் பயன்பாட்டிற்கு வராத மேல்நிலை குடிநீர் தொட்டி
-
ஹசீனாவுக்கு எதிரான தண்டனை: அரசியல் குழப்பத்தில் வங்கதேசம்!
-
காவணிப்பாக்கம் - கரும்பாக்கம் தார்சாலை அமைக்க வலியுறுத்தல்
-
இருக்கை வசதி இல்லாமல் வாலாஜாபாதில் பயணியர் அவதி
-
காலி மனையில் மழைநீர் தேக்கம் அய்யங்குளத்தில் கொசு தொல்லை
Advertisement
Advertisement