இருக்கை வசதி இல்லாமல் வாலாஜாபாதில் பயணியர் அவதி
வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பயணியர் அமர இருக்கை வசதி இல்லாததால், பேருந்துக்கு காத்திருக்கும் பயணியர் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர் .
வாலாஜாபாத் சுற்றிலும் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வாலாஜாபாத் பேரூராட்சி மற்றும் சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்தோர், தினமும் வாலாஜாபாத் பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து பேருந்து பிடித்து ஒரகடம், தாம்பரம், சென்னை மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பயணிக்கின்றனர்.
மேலும், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர், வாலாஜாபாத் பேருந்து நிலையம் வந்து, கல்வி கூடங்களுக்கு செல்கின்றனர்.
இப்பேருந்து நிலையத்தில், பயணியர் அமர்வதற்கென தனியாக இருக்கை வசதி இல்லை.
இதனால், பேருந்துக்கு காத்திருப்போர், பயணியர் நிழற்குடை வளாகத்தின் கூரை கீழே உள்ள திண்ணை போன்ற இடத்தில் அமர வேண்டி உள்ளது.
எனவே, வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் பயணியர் வசதிக்காக இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டுமென, பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும்
-
ரயிலில் கஞ்சா கடத்திய பொள்ளாச்சி வாலிபர்கள் கைது
-
தாய் இறந்த துக்கம் தாளாமல் பிளஸ் 1 மாணவர் தற்கொலை
-
ராமாபுரத்தில் பராமரிப்பற்ற பூங்கா மேய்ச்சல் இடமாக மாறிய அவலம்
-
பயங்கரவாத டாக்டர்களிடம் வாடகை பாக்கியை வாங்கி தரும்படி போலீசிடம் கெஞ்சிய மத போதகர்
-
கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்க முடிவு வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்க முடிவு
-
7வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்