சாலையோர பள்ளத்தால் மணியாட்சியில் விபத்து அபாயம்

காஞ்சிபுரம்: சாலை ஓர பள்ளத்தால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

பள்ளூர் - சோகண்டி சாலையில் இருந்து, ஊவேரி ஊராட்சியைச் சேர்ந்த மணியாட்சி கிராமத்திற்கு செல்லும் சாலை உள்ளது.

இச்சாலை வழியாக, மணியாட்சி, சாமந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச்சேர்ந்த மக்கள் காஞ்சிபுரம், அரக்கோணம், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு, தார் சாலை வழியாக சென்று வருகின்றனர்.

முதல்வரின் சாலைகள் விரிவாக்க திட்டத்தில், கடந்த ஆண்டு சாலையை புதுப்பிக்கப்பட்டது. மணியாட்சி கிராமம் மற்றும் பள்ளூர் சோகண்டி இணைப்பு சாலை ஆகிய இரு இடங்களில், வேகத் தடை அமைக்கப்பட்டது.

மணியாட்சி கிராமம் அருகே, சாலை ஓரத்தில் ஆபத்தான முறையில் பள்ளம் உள்ளது.

எனவே, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையோர தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement