காலி மனையில் மழைநீர் தேக்கம் அய்யங்குளத்தில் கொசு தொல்லை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, சின்ன அய்யங்குளம் ஐஸ்வர்யம் நகரில் காலி மனையில் தேங்கியுள்ள பாசி படர்ந்த மழைநீரால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சி, சின்ன அய்யங்குளம், மிலிட்டரி சாலையோரம் உள்ள ஐஸ்வர்யம் நகரில் மழைநீர் வடிகால்வாய் வசதி இல்லாததால், கடந்த வாரம் பெய்த மழையால் காலி மனையில் குட்டைபோல தேங்கியுள்ள மழைநீர் பாசி படர்ந்த நிலையில் தேங்கியுள்ளது.
நாள் கணக்கில் தேங்கும் மழைநீரால் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
எனவே, காலி மனையில், தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தவும், இப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐஸ்வர்யம் நகர் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
ரயிலில் கஞ்சா கடத்திய பொள்ளாச்சி வாலிபர்கள் கைது
-
தாய் இறந்த துக்கம் தாளாமல் பிளஸ் 1 மாணவர் தற்கொலை
-
ராமாபுரத்தில் பராமரிப்பற்ற பூங்கா மேய்ச்சல் இடமாக மாறிய அவலம்
-
பயங்கரவாத டாக்டர்களிடம் வாடகை பாக்கியை வாங்கி தரும்படி போலீசிடம் கெஞ்சிய மத போதகர்
-
கோயம்பேடு - நந்தம்பாக்கம் இடையே வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்க முடிவு வரும் ஜூனில் மெட்ரோ ரயில் இயக்க முடிவு
-
7வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்