திம்மராய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

கிருஷ்ணகிரி: குட்டப்பள்ளி கிராமத்தில், திம்மராய சுவாமி கோவில் கும்பாபி-ஷேக விழா நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி ஒன்றியம் குட்டப்-பள்ளி கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத
திம்மராய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
இதையொட்டி கடந்த, 21 மாலை, யாகசாலை
பிரவேசம், கலச ஆராதனை, நேற்று முன்தினம் காலை,
பிரதான ஹோமங்கள், நவகலச ஸ்தாபனம், மஹாசாந்தி
ஹோமம் நடந்தது.
நேற்று காலை, 9:30 மணிக்கு, கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்-தர்கள் பூஜை பொருட்களுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்-தனர். கோ பூஜை, திம்மராய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா மங்களாரத்தி நடந்தது.
இதில், தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., முருகன் உள்பட ஏராள-மான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடு-களை, குட்டப்பள்ளி இளைஞர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement