சத்ய சாய்பாபா கோவிலில் நுாற்றாண்டு விழா

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் கணேசா காலனியில் சத்ய சாய்பாபா கோவில் உள்ளது. இங்கு, கெலமங்கலம் சத்-யசாய் சேவா சமிதி சார்பில், நுாற்றாண்டு விழா நேற்று நடந்தது. காலையில் சிறப்பு ஹோமங்கள், மகா மங்களாரத்தி, தீபாரா-தனை, சிறப்பு பூஜை நடந்தது.


பின்னர் அலங்கரித்த சத்ய சாய்பாபாவின் திருஉருவ படத்தை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து, மேள, தாளங்கள் முழங்க, பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். சுவாமி வேடமணிந்த பக்தர்கள் அருள் வந்து ஆடி சென்றனர்.தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் மற்றும் திரளான பக்-தர்கள் சுவாமி
தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது.

Advertisement