அமைந்தகரை திருவீதி அம்மன் கோவில் தெருவுக்கு விமோசனம் எப்போது?
அமைந்தகரை: அரைகுறை பணிகளால், போக்குவரத்திற்கு லாயக்கற்ற திருவீதி அம்மன் கோவில் தெருக்கள் குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ளது. இந்த சாலைக்கு எப்போது விமோசனம் கிடைக்கும் என, பகுதிமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அண்ணா நகர் மண்டலம், 101வது வார்டில், அமைந்தகரை, திருவீதி அம்மன் கோவில் தெரு மற்றும் மஞ்சக்கொல்லை தெரு உள்ளன. இந்த பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
எட்டு ஆண்டுகள் இப்பகுதியில், 10 ஆண்டுகளுக்கு முன், கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. அதன்பின், பல்வேறு காரணங்களுக்காக பள்ளம் தோண்டப்பட்டு, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இங்கு புதிய சாலை அமைக்க வேண்டும் என, எட்டு ஆண்டுகளுக்கு மேல் முதல்வர், சென்னை மாநகராட்சி உள்ளிட்ட துறைகளுக்கு, மக்கள் தொடர்ந்து மனு அளித்து வந்தனர்.
இதுதொடர்பாக, நம் நாளிதழில் அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, இங்கு சாலை அமைப்பதற்காக, 16.72 லட்சம் ரூபாய் மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.
சாலை பணிக்கு முன், 2023 அக்., மாதம் பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கின. பல இழுபறிக்குப் பின், இந்தாண்டு துவக்கத்தில், 90 சதவீத பணிகள் முடிந்தன.
அதைத்தொடர்ந்து, புதிய சாலை பணியை துவங்காமல், அரைகுறையாக விட்டுவிட்டனர்.
தற்போது, மழை பெய்ய துவங்கியதால் சாலை முழுதும் குண்டும் குழியுமாக மாறி, சகதியாக காட்சியளிக்கிறது.
இதுகுறித்து, அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் சாஜித் பாஷா கூறியதாவது:
பல ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின், திருவீதி அம்மன் கோவில் தெருக்கள், மஞ்சக்கொல்லை தெரு குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளிவந்த பின், புதிய சாலை அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்தனர்.
அலட்சியம் இதை சுற்றியுள்ள கதிரவன் காலனி, அய்யாவு தெரு உள்ளிட்ட இடங்களில், பல மாதங்களுக்கு முன்பே புதிய சாலை அமைக்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரியின் அலட்சிய போக்கால், பணிகள் முடங்கின.
தற்போது பெய்து வரும் மழையால், சாலை முழுதும் சேறும், சகதியுமாக மாறி கடும் வேதனைகளை சந்திக்கிறேம்.
இதுகுறித்து, அதிகாரிகளிடம் கேட்டால் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.
முதல்வர் தனிப்பிரிவு, மண்டல அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. அதேபோல், புதிய சாலை அமைக்கும் முன் மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
கோபி, நம்பியூரில் சாரல் மழை
-
2 பெண்கள் உள்பட மூன்று பேர் மாயம்
-
கார் டிரைவரால் விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு அமைச்சர் உதவி
-
ரயில்வே ஸ்டேஷனுக்கு வழித்தடத்துடன் காளை மாட்டு சிலை சிக்னல் விரிவாக்கம்
-
ஈரோடு-சேலம் இடையே மீண்டும் 'மெமு' ரயில்
-
ஓய்வு பேராசிரியை வீட்டில் மீண்டும் திருட்டு கண்காணிப்பு வளையத்தில் பழங்குற்றவாளி