கட்டப்பட்ட மூன்றே ஆண்டில் சேதமடைந்த வடிகால்வாய்

விருகம்பாக்கம்: கட்டப்பட்ட மூன்றே ஆண்டில் மழைநீர் வடிகால்வாய் சேதமடைந்துள்ளதால், கட்டுமான தரம் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கோடம்பாக்கம் மண்டலம், விருகம்பாக்கம் 128வது வார்டில் தாராசந்த் நகர் 3வது தெரு உள்ளது. பருவ மழையின் போது இத்தெருவில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக மாறியது.

இதையடுத்து, கடந்த 2022ம் ஆண்டு அப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் அச்சாலை வழியாக லாரி சென்ற போது, மழைநீர் வடிகால்வாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டு உள்ளது.

கட்டப்பட்ட மூன்றே ஆண்டில் மழைநீர் வடிகால்வாய் சேதமடைந்துள்ளதால், கட்டுமான தரம் குறித்து சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அப்பகுதியை கடந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பதுடன் வடிகாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

Advertisement