தம்பதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
கடலுார்: கடலுாரில் தம்பதியை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
கடலுார் அடுத்த எஸ்.புதுாரைச் சேர்ந்தவர் குமரவேல் மனைவி ஜெயசுதா, 40; இவர், ஆடுகள் வளர்த்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த கோவிந்த ராசு என்பவர் மாடு வளர்த்து வருகிறார். ஆடு, மாடுகளை மேய்ப்பது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கோவிந்தராசு தரப்பினர், ஜெயசுதா, அவரது கணவர் குமரவேலை தாக்கினர்.
புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார், கோவிந்தராசு உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement