வாக்காளர் திருத்த சிறப்பு முகாம் ஆய்வு

சேத்தியாத்தோப்பு: -: வாக்காளர் தேர்தல் உதவி மைய சிறப்பு முகாமினை புவனகிரி தாசில்தார் ஆய்வு செய்தார்.

சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில், 15 வார்டுகளுக்கான வாக்காளர் தீவிர திருத்தப்பணிகள் கடந்த, 10 தினங்களுக்கு முன்பு துவங்கி நடந்து வருகிறது. வாக்காளர் திருத்தப்பணிகளை தீவிரப்படுத்தி விரைந்து முடிக்க பேரூராட்சி சார்பில் சிறப்பு முகாம் நடந்தது.

நேற்று புவனகிரி தாசில்தார் அன்பழகன், தேர்தல் உதவி மையம் வாக்காளர் திருத்த சிறப்பு முகாமினை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டார். சேத்தியாத்தோப்பு குறுவட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், வி.ஏ.ஓ., அசோக்குமார், பேரூராட்சி துணைத்தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

Advertisement