இன்ஸ்பெக்டர்களாக 10 பேர் பதவி உயர்வு
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 10 சப் இன்ஸ்பெக்டர்கள், இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
தமிழகத்தில் சப் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்த 240 பேருக்கு இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.
இதில், கடலுார் மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்த எழில்தாசன், சந்துரு, ரவிச்சந்திரன், கவியரசன், ஆனந்தன், ஜவ்வாது உசேன், சங்கர், அமலா, பொன்மகரம், ஜெயதேவி உள்ளிட்ட, 10 பேர் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
அவர்களை எஸ்.பி., ஜெயக்குமார் பாராட்டி, பதவி உயர்வு பெற்றதற்கான சான்றிதழ்களை வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement