தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த சின்ன பகண்டையில் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை, அண்ணாமலை பல்கலை தொல்குடி வேளாண்மை மேலாண்மைத் திட்ட குழுவினர் இணைந்து, இரு தினங்களுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் நடத்தினர்.

இதில் தேனீ வளர்ப்பின் அடிப்படை நுட்பங்கள்,தேன் சேகரிப்பு, வடிகட்டி பேக்கிங் செய்தல், மதிப்பு கூட்டல் ஆகியவை குறித்து, செல்வ குமார் பயிற்சி அளித்தார்.

இந்த முகாமில், டாக்டர்கள் அறிவுடைநம்பி, ரமேஷ்குமார், விஷ்ணுதேவி, திட்ட உதவியாளர் திலீபன், மகேஸ்வரன் கலந்து கொண்டு தேனீ வளர்ப்பால் கூடுதல் வருமானம் பெறும் வழி முறைகளை விளக்கினர்.

இதில் கல்வராயன் மலை,பச்சைமலை பகுதி தேனீ வளர்ப்பாளர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

Advertisement