வரித்துறை மனித நேயத்துடன் இருக்க வேண்டும்: முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு
சென்னை: ''வரித்துறை என்பது வெறும் தொழில்நுட்பத்துடன் இயங்காமல், மனித நேயத்துடன் செயல்பட வேண்டும்,'' என, நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் தெரிவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை இயக்குநர் ஜெனரல் பிரதாப் சிங் எழுதிய, 'தேசத்திற்கான சேவையில்' என்ற நுால் வெளியிட்டு விழா, நேற்று சென்னையில் நடந்தது.
நுாலின் முதல் பிரதியை, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் வெளியிட்டார். தமிழக வருமான வரித்துறை இயக்குநர் பிரதாப் சிங் பெற்றுக் கொண்டார். விழாவில், பிரதாப் சிங் பேசியதாவது:
இந்திய வருவாய் பணியில் உள்ள அதிகாரி களுக்கு, நான் எழுதிய புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன். இளம் அதிகாரிகள் மற்றும் சிவில் தேர்வு எழுதுவோருக்கு, இப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.
முன்பை விட வரித்துறையில், நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. இளம் அதிகாரிகள் புதிதாக யோசிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் பேசியதாவது:
இப்புத்தகம் சிவில் பணியில் உள்ள அதிகாரிகளின் வாழ்வை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் வரித்துறை அடுத்த கட்டத்திற்கு செல்ல, என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக உள்ளது.
வருவாய் துறையில் இருப்போர், தங்களின் நினைவுகளை பகிர்வது, அரிதான ஒன்று. நுாலாசிரியர் தன் சிறப்பான பணி காலத்தையும், சாதனைகளையும், நேர்மையாக எழுதியுள்ளார்.
இந்தியா உலக அரங்கில் உயர வேண்டும் என்ற ஆழமான தேச உணர்வு, இந்நுால் முழுதும் உள்ளது. ஒரு அதிகாரி நிர்வாகத்தில், என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய, இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும்.
உலகின் திறமையானவர்களின் பட்டியலில், இந்திய சிவில் தேர்வு அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.
வரித்துறை என்பது வெறும் தொழில்நுட்பத்துடன் இயங்காமல், மனித நேயத்துடன் செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
மேலும்
-
இந்தியாவின் விண்வெளி பயணத்தில் பெருமைமிக்க மைல்கல்; பிரதமர் மோடி பாராட்டு
-
கிறிஸ்துமஸ் அன்று போர் நிறுத்தக் கோரிக்கை நிராகரிப்பு; ரஷ்யாவின் செயலால் போப் 14வது லியோ வேதனை
-
வெள்ளி விலை ஒரே நாளில் ரூ.10 ஆயிரம் உயர்வு; தங்கம் விலையும் வரலாறு காணாத உச்சம்
-
காணவில்லை!
-
புன்னம் சத்திரம் 3 சாலை பிரிவில் ரவுண்டானா அமைக்க எதிர்பார்ப்பு
-
மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு