ரேஷன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை: பொது வினியோக திட்டத்திற்கு, தனி துறை ஏற்படுத்த வேண்டும்.
ஊதிய உயர்வை விரைவாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கத்தினர், சென்னை சிவானந்தா சாலையில் நேற்று, மாநிலம் தழுவிய அளவில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், 5,000க்கும் அதிகமான ரேஷன் கடை பணியாளர்கள் பங்கேற்றனர்.
சங்கத் தலைவர் ஜெயசந்திர ராஜா கூறுகையில், ''கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பணியாளர்கள், குறைந்த ஊதியத்தில் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு வழங்க வேண்டும்,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement