மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கரூர்: கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் வினாடிக்கு, 13,989 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 14,664 கன அடியாக அதிகரித்தது.
அதில், சம்பா சாகுபடி பணிக்காக காவிரியாற்றில், 14,144 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில் வினாடிக்கு, 520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 25.71 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மும்பை மாநகராட்சி தேர்தல்: தாக்கரே சகோதரர்கள் கூட்டணி
-
இந்தியா-எகிப்து விமான படை ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்திய தளபதி எகிப்திற்கு பயணம்
-
ஓட்டுக்கு ரூ. 2,000; தொகுதிக்கு ரூ.40 கோடி! வாக்காளர்களை குளிர்விக்க பலே திட்டம்: மோப்பம் பிடித்தது மத்திய உளவுத்துறை
-
ஆரவல்லி மலை தொடரில் புது சுரங்க குத்தகைக்கு மத்திய அரசு தடை
-
அகற்றுவோம்!
-
'டில்லிக்கு வந்தாலே அலர்ஜி': மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
Advertisement
Advertisement