டில்லிக்கு புறப்பட்டு சென்றார் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்!
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், இன்று (டிச.,13) தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் டில்லி புறப்பட்டு சென்றார்.
அதிமுக பொதுக்குழுவில், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரமும் பழனிசாமிக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் நேற்றுமுன்தினம் இபிஎஸ்-ஐ சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஏதும் இபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக கூறினார். இருந்தாலும், இந்த சந்திப்பில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்த பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், இன்று நயினார் நாகேந்திரன் டில்லி புறப்பட்டு சென்றார்.
அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா உள்ளிட்டோரை சந்திக்கிறார். தொகுதி பங்கீடு மற்றும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது குறித்து விவாதிப்பார் என தெரிகிறது. டில்லியில் அமித் ஷாவை சந்தித்த பின், நயினார் நாகேந்திரன் மீண்டும் இபிஎஸ்-ஐ சந்தித்து, இதுதொடர்பாக பேசுவார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
@block_Y@
கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்த முடிவை அதிமுக எடுக்குமென அக்கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்த கேள்விக்கு, நயினார் நாகேந்திரன் அளித்த பதில்:
அகில இந்திய அளவில் தேஜ கூட்டணி, பாஜ தலைமையில் நடைபெறுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் நடைபெறும். அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக இருக்கிறார். அவர் (இபிஎஸ்) சில முடிவுகளை எடுப்பார், என்றார்.block_Y
விமான பயணங்களால் பொருளாத இழப்புக்கள் .கணினி உலகத்தில் இருந்த இடத்தில இருந்தே காணொளி காட்சிகள் மூலம் எதையும் முடிவு செய்யலாமே
பாஜக தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்டுள்ளது. இருக்கும் இரண்டு மூன்று சீட்டும் தேறாது
ஆளுநர் ரவி அடுத்தது அண்ணாமலை அடுத்தது நயினார் நாகேந்திரன் என டெல்லிக்கு ஓடிவர செய்து என்ன செய்கிறார் அமித்ஷா?
நீ டாஸ்மாக் ஓடி போவாய்...அவங்க டெல்லி போறாங்க.....
எண்ணிக்கை முக்கியமல்ல எண்ணம் தான் முக்கியம் என்று கூறுவதற்காக போவார் என்று நினைக்கிறேன்.மேலும்
-
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காரை முற்றுகையிட்ட தொகுதி மக்கள்!
-
குற்றவாளிகளுக்கு அரசு ஊக்கம் அளிக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு
-
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விழா தாமரை பிரதர்ஸ் நுால் அறிமுகம்
-
சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாக போராட்டம்
-
ஜனவரி 6ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,760 சரிவு