முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் சமஸ்கிருதம்: பாடமாக வைக்கிறது லாகூர் பல்கலைக்கழகம்
இஸ்லாமாபாத்: 'எங்களுக்கும் சொந்தமானதுதான்' எனும் முழக்கத்துடன், பாகிஸ்தான் வகுப்பறைகளுக்குள் சமஸ்கிருதம் நுழைந்து புத்துயிர் பெறுகிறது. லாகூர் பல்கலைக்கழகத்தில் இது பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது.
பகவத் கீதை, மகாபாரதக் கதைகளும் கற்றுத் தரப்பட உள்ளன.கடந்த 1947ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் முதல் முறையாகவும், அந்நாட்டு உயர்கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் சமஸ்கிருத மொழியை ஒரு பாடமாக லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக் கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது-.
சமஸ்கிருத இலக்கணத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பாணினி பிறந்த சலாதுரா கிராமம், தற்போது பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா
மாகாணத்தில் உள்ளது.
அறிமுகம்
மேலும், உருது, பஞ்சாபி மற்றும் சிந்தி மொழி சொற்களுக்கான வேர் சொற்கள் சமஸ்கிருத்தில் இருப்பதாக கூறப்படுவதையடுத்து, சமஸ்கிருதம் எங்களுக்கும் சொந்தமானது என்ற முழக்கத்துடன் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக லாகூர்
பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
சமஸ்கிருத பாடத்திட்டத்தை, லாகூரில் உள்ள பார்மன் கிறிஸ்டியன் கல்லுாரியின் சமூகவியல் இணை பேராசிரியரான டாக்டர் ஷாஹித் ரஷீத்
வடிவமைத்துள்ளார்.
செம்மொழிகள், மனிதகுலத்துக்கு தேவையான மிகுந்த ஞானத்தை கொண்டுள்ளன என்ற எண்ணத்தில், இவர் முதலில் அரபு மற்றும் பாரசீக மொழிகளை கற்க துவங்கி
உள்ளார்.
அதன் பின் சமஸ்கிருதத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டு, கேம்பிரிட்ஜ் சமஸ்கிருத அறிஞர் அன்டோனியா ரூப்பல் மற்றும் ஆஸ்திரேலிய இந்தியவியலாளர் மெக்கோமாஸ் டெய்லர் ஆகியோரிடம் ஆன்லைன் வாயிலாக சமஸ்கிருதத்தை பயின்றுள்ளார்.
வரவேற்பு
இவரின் சீரிய முயற்சியின் காரணமாக ஆரம்பத்தில் மூன்று மாத காலம், வார இறுதி நாட்கள் பயிற்சி வகுப்பாக துவங்கப்பட்ட இந்த சமஸ்கிருத கல்வி, மாணவர்கள் இடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தில் முழு நேர பாடமாக இந்த சமஸ்கிருத கல்வி மாற்றப்பட்டுள்ளது.வெறும் மொழியை மட்டும் கற்பதோடு மட்டுமின்றி, மகாபாரதம் மற்றும் பகவத் கீதை ஆகியவற்றை இலக்கியங்களாகவும், தத்துவங்களாகவும் பயிற்றுவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நல்லுறவு
இதன் வாயிலாக அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் பாகிஸ்தானில் இருந்தே கீதை மற்றும் மகாபாரத ஆய்வாளர்களை உருவாக்க பல்கலைக்கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் ஹிந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் அரபு மொழியை கற்பது போல், பாகிஸ்தானியர்கள் சமஸ்கிருதம் கற்பது, இரு நாடுகளுக்கு இடையே ஒரு நல்லுறவு பாலமாக அமையும் என்று பேராசிரியர்கள் நம்புகின்றனர்.
உளறிய அறிவாளி எங்கே?
நல்ல வேளை! அந்த லாகூர் பல்கலைக்கழகத்தில் நம் திராவிட துணை வேந்தர்கள் யாருமில்லை!
ஆனால் அடுத்த சமுதாயத்தவனை ஏமாற்றுவதில், முதுகுல குத்துவதால் 1400 வருடம் அனுபவம் உள்ளவன் பாகிஸ்தானிய கூட்டங்கள். ஒண்ணுக்குள்ளே ஒண்ணு என்று சொல்லியே 7 லக்ஷம் காஷ்மீரி ஹிந்துக்களை அவர்களது வாழும் பூமியில் இருந்து விரட்டி விட்டவன். சகோதரி என்று சொல்லி பெண்ணை மானபங்கம் செய்து மர அறுவையில் அறுத்து கொலை செய்த பாவிகள்.
பாக்கிஸ்தான் லாஹூர் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் பேராசிரியர் இன்னும் 20 வருடங்களில் பல கீதை, மஹாபாரத மற்றும் சமஸ்க்ருத அறிஞர்களை உருவாக்குவோம் என்று சொல்கிறான். ஆனால் இங்கே அதை இறந்த மொழி என்று கூவுகிறான்.
நல்லா நடிக்கிறாங்க , அங்க இருக்கிற ஹிந்து மக்களை கொலை செய்து உலகத்துக்காக முதலை கண்ணீர் வடிக்கிறாங்க நாதாரிகள். இனிமேல் என்றும் நம் இந்தியா பாகிஸ்தானை நம்பாது, நம்பவும் கூடாது.
நம்ப முடியவில்லை. பல மொழிகள் உருவானதற்கு மூலம் என்று சம்ஸ்கிருதத்தை பாகிஸ்தான் போற்றுகிறது. இங்கு வெறுப்பை கக்குகிறார்கள். எதிரி நாட்டில் வெற்றி கோடி நாட்டும் சம்ஸ்கிருதம் குறித்து பெருமைப்பட வேண்டும். உண்மையான அறிவு ஞானதின் கருவூலம்.
ஹிந்து சிறுமிகளைக் கடத்தி மதம் மாத்துறதா தொடர்ந்து ந்யூச்சு வந்துச்சுல்ல >>>>> அதை மறைக்க இப்படி ....... திராவிடியால் மாடல் டெக்கினிக்கு .....
பாகிஸ்தான் விரும்ப ஆரம்பித்துள்ளது.
சமஸ்கிருதம் எங்களுக்கும் சொந்தமானது என்ற முழக்கத்துடன் சமஸ்கிருதத்தை ஒரு பாடமாக லாகூர் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தி உள்ளது.
சமஸ்கிருதம் மொழி உலகில் சுமார் 100 பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக இருக்கிறது. அமெரிக்க நாசாவிலும் இந்த மொழியை வைத்து அறிவியலுக்கு தேவையான ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.மேலும்
-
அஜித்துடன் பைக் ரேஸ் சாதனைப்பெண் நிவேதாவின் ஆசை
-
குறளுக்கு ஒரு கண்ணப்பன்
-
தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
-
அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை; புடின் குற்றச்சாட்டு
-
அறுசுவை: நமக்கான 'ஸ்பெஷல்'
-
மறக்க முடியாத சுவைக்கு அவிநாசி ஹரி பவனம் ஓட்டல்