அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை; புடின் குற்றச்சாட்டு
மாஸ்கோ: அமைதி பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை என ரஷ்ய அதிபர் புடின் குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையிலான நான்கு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்க உள்ளார். உக்ரைனில் அமைதியை உருவாக்க வேண்டும் என உலக நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனாலும், ரஷ்யா நேற்று உக்ரைன் மீது 500 ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: உக்ரைன் மோதலை அமைதியான முறையில் தீர்க்க விரும்பவில்லை.
அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் ஆர்வம் காட்டவில்லை. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை என்றால், ராணுவ நடவடிக்கை மூலம் இலக்குகளை அடைவோம். இவ்வாறு புடின் கூறியுள்ளார்.
இன்னும் ஓரிரு வருடங்களில் இரண்டு நாடுகளும் தரை மட்டமாகி விடும்.
போரை தொடங்கியதே நீங்கள்தான். போரை தொடக்கிவிட்டு பின்பு உக்ரேன் வான் பகுதியில் உங்கள் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தது ஏன்? உங்களின் அமைதிப் பேச்சுவார்த்தையின் நோக்கம் என்னவென்று மற்றவர்களுக்கு தெரியாதா?மேலும்
-
தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் மனு
-
இளைஞர்கள் தலைமையேற்க முன் வர வேண்டும்: அதானி பேச்சு
-
பொங்கல் நாளில் நடக்க இருந்த பட்டயக் கணக்காளர் தேர்வு மாற்றம்!
-
உ.பி.,யை விட தமிழகம் நிலைமை மோசம்; திமுகவை மீண்டும் சீண்டிய காங்கிரஸ்!
-
காங்கிரஸ் கட்டமைப்பை நிச்சயம் வலுப்படுத்த வேண்டும்; திக்விஜய் சிங் கருத்துக்கு சசிதரூர் ஆதரவு