அதிபர் டிரம்பின் விசா கட்டண உயர்வுக்கு எதிராக 20 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொண்டு வந்துள்ள 'எச்1பி' விசா கட்டண உயர்வு மற்றும் விசா தொடர்பான புதிய கட்டுப்பாடுகளுக்கு எதிராக, அமெரிக்காவின் 20 மாகாணங்கள் ஒன்றிணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், குடியேற்ற விதிகளில் சமீப காலமாக மிக கடுமை காட்டி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, எச்1பி விசாவுக்கான கட்டணத்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தினார்.
மேலும், அமெரிக்கர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பை வெளிநாட்டினர் எச்1பி விசா வாயிலாக முறைகேடாக தட்டிப் பறித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.
எச்1பி விசாவுக்கான கட்டணத்தை, 4.50 லட்சம் ரூபாயில் இருந்து, 90 லட்சம் ரூபாயாக அதிரடியாக உயர்த்தி, கடந்த செப்டம்பரில் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில், அமெரிக்க அரசியலமைப்பின்படி, அதிபர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி சட்டங்களுக்கு புறம்பாக தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது என்று கூறி, விசா கட்டண உயர்வுக்கு எதிராக கலிபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்கள் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளன.
நாட்டின் மொத்தமுள்ள 50 மாகாணங்களில், 20 மாகாணங்கள் இவ்வாறு வழக்கு தொடர்ந்துள்ளன.
எச்1பி விசா வாயிலாக அமெரிக்காவுக்கு வரும் வெளிநாட்டு திறமையாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத் துறைகளில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.
விசா கட்டண உயர்வால் தங்கள் மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதாகவும் மாகாணங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பல பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள், வெளிநாட்டு அறிஞர்களையே பெரிதும் நம்பியுள்ளன. இக்கட்டண உயர்வால் அந்நிறுவனங்களுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளன.
ஏதோ ஒரு ஐந்து அல்லது ஆறு லட்சம், அல்லது அதிகபட்சம் பத்து லட்சம் ஓகே. அது என்ன வானத்தை முட்டும் அளவுக்கு 90 லட்சம் கட்டணம். நாங்கள் என்ன அமெரிக்காவில் பத்து ஏக்கர் நிலமா கேற்கிறோம், அங்கே வந்து படிக்கவும், பணிபுரியவும் விசா கேற்கிறோம், அவ்வளவுதான். 90 லட்சம் கொடுத்து விசா வாங்கி வந்து, அங்கே 90 வயதுவரையில் நாங்கள் அங்கேயே பணிபுரிந்தாலும், அந்த 90 லட்சத்தை சம்பாதிப்பது மிக மிக கடினம்.மேலும்
-
திருவனந்தபுரம் தமிழ்ச் சங்க விழா ; தாமரை பிரதர்ஸ் நுால் அறிமுகம்
-
2025 இந்தியாவின் டாப் 10 செய்திகள் இவை தான்!
-
விஐபி தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல்: ஓர் சிறப்பு அலசல்!
-
உத்தராகண்டில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்தது; பயணிகள் 7 பேர் பலி
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3,360 சரிவு
-
முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு செல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை; அண்ணாமலை