2025 இந்தியாவின் டாப் 10 செய்திகள் இவை தான்!

1


நமது சிறப்பு நிருபர்




இந்தாண்டில் (2025) நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வுகள் பல நடந்தன. மகிழ்ச்சி, அதிர்ச்சி, சோகம், வேதனை என வெவ்வேறு உணர்வுகளை ஏற்படுத்திய இந்த நிகழ்வுகளின் டாப் 10 செய்திகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.



1. மகா கும்ப மேளா (ஜன.,13 முதல் பிப்.,26 வரை)

உ.பி., மாநிலம் பிரயாக் ராஜில் மகா கும்ப மேளா நடந்தது. உலகம் முழுவதும் இருந்து 66 கோடி பக்தர்கள் புனித நீராடினர்.



2. டில்லி தேர்தல் (பிப்ரவரி 8)
தேசிய தலைநகர் டில்லியில் நடந்த தேர்தலில், அசைக்க முடியாதவர் என கருதப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை மண்ணை கவ்வ வைத்து வெற்றிக் கொடி நாட்டியது பாஜ.




3. சாம்பியன்ஸ் டிராபி வெற்றி (மார்ச் 9)
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை வென்ற இந்தியா கோப்பையை கைப்பற்றியது. தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, ஒரு போட்டியில் கூட தோற்காமல் கோப்பையை வென்றது. பெண்களுக்கான ஐசிசி உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய அணியினர் கோப்பை வென்றனர்.


4. ஆபரேஷன் சிந்துார் (மே 7 முதல் மே 10 வரை)



ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா மையத்தில் வெறியாட்டம் போட்ட பயங்கரவாதிகள், சுற்றுலாப் பயணிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக, இந்திய ராணுவம், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய அதிரடி தாக்குதல் தான் இந்தாண்டின் டாப் செய்தியாகும்.



5. பெங்களூரு சோகம் (ஜூன் 4)

பிரீமியர் லீக் கோப்பை வென்ற பெங்களூரு அணியின் கொண்டாட்டத்துக்காக, சின்னசாமி மைதானத்தில் கூடிய ரசிகர்கள் 11 பேர், நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



6. ஏர் இந்தியா விமான விபத்து- (ஜூன் 12)
ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா டிரீம் லைனர் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்து நொறுங்கியதில் 241 பேர் உயிரிழந்தனர். விமான பயணிகளில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.



7. புதிய துணை ஜனாதிபதி அறிவிப்பு (ஆகஸ்ட் 17)

இந்தியாவின் புதிய துணை ஜனாதிபதியாக இருந்த ஜக்தீப் தன்கர் பதவி விலகினார். புதிய துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழரான இவர், முன்னதாக, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் கவர்னராக பொறுப்பு வகித்தவர். கோவை தொகுதியின் எம்.பி.,யாகவும் பதவி வகித்தவர்.

8. ஜி.எஸ்.டி.,யில் மாற்றம் (செப்.,22)


வரி சீர்திருத்த நடவடிக்கையாக, ஜி.எஸ்.டி.,யில் மாற்றங்கள் அமல் செய்யப்பட்டன. அதன்படி முதலில், 4 அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., நவராத்திரி முதல் நாளில் இருந்து 2 அடுக்குகளாக குறைக்கப்பட்டது. இது, நுகர்வோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பொருட்களின் விற்பனையை அதிகரித்தது.



9. கரூர் நெரிசல் (செப்டம்பர் 27)


நடிகர் விஜய் கலந்து கொண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 அப்பாவிகள் பலியான சம்பவம், உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


10. செங்கோட்டை அதிர்ச்சி (நவம்பர் 10)

டில்லி செங்கோட்டையில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில், 15 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் அனைவரும் முதுநிலை மருத்துவம் படித்த டாக்டர்கள் என்பது மேலும் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

Advertisement