பைக் - ஆட்டோ மோதி புதுப்பெண் உயிரிழப்பு

அரியலுார்: அரியலுார் அருகே பைக் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் புதுப்பெண் உயிரிழந்தார்.

அரியலுார் மாவட்டம், சன்னாவூரை சேர்ந்தவர் ஜெனிபர், 26, இவர், திருமானுார் அஞ்சலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், நேற்று காலை, 8:00 மணியளவில் பணிக்கு செல்வதற்காக சன்னாவூரிலிருந்து, திருமானுாருக்கு பைக்கில் புறப்பட்டார்.

மேலக்காவாட்டாங்குறிச்சி அருகே அவரின் பைக் மீது, லோடு ஆட்டோ மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஜெனிபர் பலியானார். திருமானுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஜெனிபருக்கு, அடுத்த வாரம் திருமணம் நடக்க இருந்த நிலையில் அவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெனிபரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

Advertisement