நாமசங்கீர்த்தனம் ஒலிக்கும் மார்கழி இன்று பிறக்கிறது
கோவை: மார்கழி பிறப்பையொட்டி, இன்று காலை நாம, நகர சங்கீர்த்தனங்கள் மாநகர வீதிகளில் ஒலிக்கத்துவங்கும். தொடர்ந்து, 30 நாட்களுக்கு இந்த மங்கள இசையை கேட்கலாம்.
மார்கழியில் பகவத்கீதை பிறந்ததால் கிருஷ்ணர் வழிபாடும், திருப்பாவையை இயற்றிய ஆண்டாளை வழிபடுதும், திருவெம்பாவையை பாராயணம் செய்து, சிவபெருமானை வழிபடுவதும் உன்னதமானது.
மார்கழியில் பிரம்ம முகூர்த்த வேளையில், வழிபாடுமேற்கொள்வதால், இரு மடங்கு நற்பலன்கள் நமக்கு கிடைக்கும். பாவங்களிலிருந்தும், கர்ம வினைகளிலிருந்தும் விடுபட்டு புண்ணியத்தை சேர்க்கலாம்.
அதிகாலை நீராடி, பகவானை வழிபடுவதால் நல்ல ஆரோக்கியம், இறையருளும், வெற்றிகளும், குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஏற்படும்.
மார்கழி மாத பிறப்பையொட்டி, வைணவ கோயில்களில் திருப்பாவையும், சைவ கோயில்களில் திருவெம்பாவையும் பாராயணம் செய்யப்படுகிறது.
ராம்நகர் ராமர், கெரடிகோயில், வாசவி கன்னிகாபரமேஸ்வரி, ராமநாதபுரம் நரசிங்கபெருமாள், பாப்பாநாயக்கன்பாளையம் சீனிவாசபெருமாள் மற்றும் ஜெகன்நாதர் கோயில்களில், மார்கழி மாத சிறப்பு வழிபாடுகள் இன்று, அதிகாலை நடக்கின்றன.
மேலும்
-
31 ஏக்கர் நிலம், 1 கிலோ தங்கம்... மொத்தம் ரூ.100 கோடி சொத்து; வசமாக சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர்
-
பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு
-
ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்
-
ஜீவகாருண்யத்திற்கு முளை்த்த சிறகுகள்
-
வங்கதேச தேர்தலில் ஜெயிக்க சதி: முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டு
-
100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்