31 ஏக்கர் நிலம், 1 கிலோ தங்கம்... மொத்தம் ரூ.100 கோடி சொத்து; வசமாக சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர்
ஹைதராபாத்: வருமானத்திற்கு அதிகமாக ரூ.100 கோடிக்கு மேலாக சொத்து சேர்த்ததாக ஆந்திராவில் போக்குவரத்து துணை ஆணையருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மகபூப்நகர் மாவட்ட போக்குவரத்து துணை ஆணையராக இருப்பவர் கிஷான். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவரது வீடு உள்பட 11 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சட்டவிரோதமாக சுமார் ரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை குவித்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அவருடைய சொத்து மதிப்பு ரூ.12.72 கோடி என்று மதிப்பிடப்பட்டாலும், சங்கா ரெட்டி மாவட்டத்தில் 31 ஏக்கர் மதிப்பிலான விவசாய நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.62 கோடி என்று அதிகாரிகள் கூறுகின்றனர். நிஷாமாபாத்தி நகராட்சிக்குட்பட்டு 10 ஏக்கர் நிலமும் சொந்தமாக வைத்துள்ளார். மேலும், லஹாரி இன்டர்நேஷனல் ஹோட்டலில் 50 சதவீத பங்குகளையும் கிஷான் வைத்திருந்துள்ளார். நிஷாமாபாத்தில் 3000 சதுர அடியிலான இடத்தையும் வாடகைக்கு விட்டுள்ளார்.
ஒரு கிலோ தங்க நகைகள், வங்கிக் கணக்கில் ரூ.1.37 கோடி பணம் மற்றும் சொகுசு கார்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மாதம் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.25 லட்சம் வரையில் சம்பளம் பெறும் அரசு அதிகாரி ஒருவர், ரூ.100 கோடி சொத்துக்கு அதிபதியாகி இருப்பது சக ஊழியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அங்கே அதிகாரிகள் இங்கே அமைச்சர்கள்.
தமிழக போக்குவரத்து துறையில் பார்த்தால் இவனைவிட பெரிய பெரிய திமிங்கலங்கள் மாட்டும்.
ஐயா எப்படி ஐயா இது, பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்துவிட்டீர்கள் போல. கொஞ்சம் எங்களை போல இருப்பவர்களுக்கு அந்த ரகசியத்தை சொல்லி கொடுங்கள், நாங்களும் ரொம்ப கஷ்டப்பட்டு அலுத்து போயாச்சு
இந்த மாதிரியான லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு அலுவலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரிருவர் தான்.
இதில் சிக்காத அரசு அதிகாரிகள்/. ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இந்தியா முழுவதும் பல லட்சம் பேர் இருக்கிறார்கள்.
சென்னை போன்ற பெருநகரங்களில் நிலம் மற்றும் கட்டிடங்கள் சம்பந்தமாக எந்த ஒரு வேலை என்றாலும் அரசுத்துறை அலுவலர்களுக்கு பல லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் நம் வேலை நடக்கும்.
பாவம் கொஞ்சம் தான் வைத்துள்ளார். ஒன்றும் நடக்க போவதில்லை. ஒரு நீதிபதியின் வீட்டில் ₹100 கோடி இருந்தே வெளியே தான் இருக்கிறார். ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்திய சட்டம் அப்படி. இது ஒரு செய்தி / விளம்பரம் அவ்வளவு தான்.
வடமாநிலம் போவது இருக்கட்டும் தமிழகத்தில் எத்தனை பேரோ
அதெல்லாம் சரி, கேஸ் பதிவாகி, வழக்கு நடந்து, தீர்ப்பு வந்து ..அதுக்குள்ளே அவர் காலம் முடிந்துவிடும்..
All corruptions are goverment official they. Overtake Ministers to earn more Never obey No law They are king of Land.What kind of punishment.Country is going BAD
இந்தாளுக்கு விஞ்ஞானப்பூர்வமா செயல்படத்தெரியல.. நம்ம தலைவர் பாசறையில் ஸ்பெஷல் ட்ரைனிங் எடுக்கணும்...
சூப்பர்
சம்பளம் ரூ 1 லட்சம் மாதம் 15 வருடம் ஆவெரேஜ் 15 x12x50,000 = 90,00,0000=செலவு ரூ 60,00,000 சாப்பாடு மற்றவற்றிற்கு ஆகமொத்தம் அவர் சொத்து ரூ 30,00,000 ஆனால் ரூ 100,00,00,000 = 333.333 மடங்கு சேமிப்பு. குழந்தாய் எனக்கும் அந்த பணம் பெருக்கும் ரகசியத்தை சொல்லேன்
கடைசியில கம்பி ன்னனும் பரவாயில்லையா கண்ணுமேலும்
-
இந்தியா - சீனா இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம்; பென்டகன் கணிப்பு
-
10 வேட்பாளர்களின் பெயர் சொல்ல முடியுமா? விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு; போலீஸ் அதிர்ச்சி
-
வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் கோவையில் பறிமுதல்
-
சன்சாத் கேல் மஹோத்சவ் விழா நிறைவு: கோவை மாணவி நேசிகாவுடன் உரையாடிய பிரதமர் மோடி