உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 75,000 தேங்காய் விற்பனைக்கு வரத்தானது. ஒரு கிலோ கருப்பு தேங்காய், 52.79 - 59.76 ரூபாய், பச்சை தேங்காய், 44.59 - 55.26 ரூபாய், தண்ணீர் வற்றியது 67.79 ரூபாய்க்கு விற்பனையானது.

* அந்தியூரில் நேற்று கூடிய வெற்றிலை சந்தைக்கு, 60 கூடை வெற்றிலை வரத்தானது. ராசி வெற்றிலை சிறியது ஒரு கட்டு, 10 ரூபாய், பெரியது, 40 முதல் 55, பீடா வெற்றிலை கட்டு, 20 முதல் 40க்கும், செங்காம்பு வெற்றிலை கட்டு, 5 முதல் 15 ரூபாய்க்கும் விற்றது.

* கோபி தாலுகா, சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 400 கிலோ வரத்தாகி, கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் கிலோவுக்கு மூன்று ரூபாய் விலை கூடியது. வரத்தான அனைத்து தென்னங்கருப்பட்டியும், 56 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement