அருட்காட்சியகத்தில் இருந்து நேரு ஆவணங்கள் காணாமல் போகவில்லை: பார்லியில் மத்திய அரசு தகவல்
நமது நிருபர்
நேருவின் ஆவணங்கள் காணாமல் போனதாக சில அறிக்கைகள் இருந்தாலும், பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் 2025ம் ஆண்டு ஆய்வின் படி எந்த ஆவணங்களும் காணாமல் போகவில்லை என லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடில்லியில் ராஷ்டிரபதி பவனின் தெற்கு பகுதியில் மாருதி வளாகத்தில் பிரதமர்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. நாட்டின் தனித்துவமான பங்களிப்பை வழங்கிய அனைத்து பிரதமர்கள் பற்றிய தகவல்கள், இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு உள்ள மறைந்த முன்னாள் பிரதமர் ஆவணங்கள் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது.
கடந்த ஜூன் மாதம் பிரதமர் மோடி பங்கேற்ற இந்தியப் பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் ஆண்டு பொதுக்குழுவில் கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. இது தொடர்பாக பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் அளித்த பதில்:
நேருவின் ஆவணங்கள் காணாமல் போனதாக சில அறிக்கைகள் இருந்தாலும், பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் 2025ம் ஆண்டு ஆய்வின் படி எந்த ஆவணங்களும் காணாமல் போகவில்லை. ஆண்டுதோறும் ஆவண தணிக்கை நடத்துவது இல்லை.
அருங்காட்சியக ஆண்டு பொதுக்குழுவில் நேரு தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனதாக கூறப்பட்டாலும் ஆவணங்கள் ஆய்வின் போது ஏதும் கண்டறியப்படவில்லை. இவ்வாறு கஜேந்திர சிங் கூறியுள்ளார்.
நாட்டின் பெருமையைக் காணாமல்போகச் செய்தவர் ......
காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு நேஷனல் ஹெரால்டு வழக்கு பெரும் தலைவலியாக உள்ளது. பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த வழக்கால் தற்போது அவர்கள் சிக்கலில் சிக்கி உள்ளனர். இதுபற்றி அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு சொத்துகளை முடக்கி வரும் நிலையில் இன்று திடீரென்று அதன் குற்றப்பத்திரிகையை டெல்லி சிறப்பு நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதனால் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.இதே தான் இவர்கள் வேலை நேரு காந்தி விவகாரம் எல்லா மறைப்பது
அப்படி என்ன முக்கியமான ஆவணம், எதுவாக இருந்தாலும் அது இந்தியாவுக்கு எதிரானதாகதான் இருக்கும்.
நல்ல வேளை தப்பிச்சாரு...
நாங்களே தூக்கி எரிந்து விட்டோம், உயிருக்கு பயந்தவர்களே என்மீது ஏறிக்கொள்ளுங்கள் என்று சொல்லி தப்பித்த கூட்டம்
இருந்து என்ன பயன் என்பதை விளக்க வேண்டும்
குப்பைகள் காணாமற் போனால் நஷ்டமில்லை.மேலும்
-
காசோலை மோசடி வழக்கு: மதிமுக எம்எல்ஏவுக்கு 2 ஆண்டு சிறை
-
மிக இளம் வயதில் தென் துருவத்தை அடைந்து இந்தியர்: இளம்பெண்ணுக்கு கடற்படை பாராட்டு
-
அரசு ஊழியர்களின் உணர்வுகளை துாண்டி போராட்டத்திற்கு இழுக்கும் இடைத்தரகர்கள்: அமைச்சர் சுப்பிரமணியன் புது தகவல்
-
யமுனை நதிக்கரையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு டில்லி ஐகோர்ட் கெடு
-
வங்கதேச முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா இறுதிச் சடங்கு; நாளை டாக்கா செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
-
கஞ்சா புழக்கம் இல்லை எனக்கூறுவது மக்களுக்குச் செய்யும் துரோகம்: அண்ணாமலை