பயங்கரவாதியை மடக்கிய நாயகர்; ஆஸி., பிரதமர் நேரில் சென்று பாராட்டு
சிட்னி: 'துப்பாக்கிச்சூடு நடத்திய பயங்கரவாதியை வெறும் கைகளில் மடக்கிய அல் அஹமது ஆஸ்திரேலியாவின் நாயகர்' என அந்நாட்டு பிரதமர் பாராட்டினார்.
ஆஸ்திரேலியாவில் பாண்டை கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பொதுமக்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். யூதர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவனான சஜித் அக்ரம் என்பவன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன் என தெரியவந்துள்ளது.
பாண்டை கடற்கரையில் பயங்கரவாதி ஒருவர் மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியபோது, ஒருவர் பின்னால் இருந்து சாமர்த்தியமாக மடக்கி பிடித்தார்.
மேலும், எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் கைகளால் பயங்கரவாதியை தாக்கி துப்பாக்கியையும் பறித்தார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அவரது அசாத்திய தைரியத்தை பாராட்ட வைத்துள்ளது. அவர் சிட்னியின் சதர்லேண்ட் பகுதியில் வணிக வளாகம் நடத்தி வரும் அல் அஹமது, 40, என தெரியவந்துள்ளது. மேற்காசிய நாடான சிரியாவைச் சேர்ந்த அவரது குடும்பம் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அல்-அஹமதுவை நேரில் சென்று, ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நலம் விசாரித்தார். இது தொடர்பாக, அவர் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்து கூறியிருப்பதாவது:
அஹமது நீங்கள் ஒரு ஆஸ்திரேலிய ஹீரோ. சிட்னி கடற்கரையில் மக்களை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து பயங்கரவாதியிடம் இருந்த துப்பாக்கியை பிடிங்கி சரணடைய வைத்த உங்களுக்கு ஒவ்வொரு ஆஸி., மக்களின் சார்பாகவும் நான் நன்றி கூறுகிறேன். இவ்வாறு அந்தோனி அல்பானீஸ் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (9)
பேசும் தமிழன் - ,
16 டிச,2025 - 20:54 Report Abuse
தீவிரவாதிகளுக்கு மத்தியில்.... இப்படி நல்ல மனிதரும் இருக்கிறார் போல் தெரிகிறது.... வாழ்த்துக்கள். 0
0
Reply
V.Mohan - ,இந்தியா
16 டிச,2025 - 17:17 Report Abuse
உண்மையில் சக மனிதர்களை கொலை செய்யும் நபர்களை கண்டால் பயம் தான் வரும். இவர் நல்லவர் தைரியமானவர் மற்றும் மதகுருக்களால் மூளைசலவை செய்யப்படாதவர்.
நமக்கு ஒரு கேள்வி எழுகிறது,- என் ஐயா?? நீங்கள் சக மனிதனை கொல்ல வேணும்?. உங்க மதத்திற்கு வேண்டாதவர்கள் எனறால், உங்கள் எல்லாம் வல்ல இறைவன் அவர்களைப் படைத்திருக்க வேண்டாமே அல்லது ஏதாவது இயற்கையை தூண்டிவிட்டு அவர்களை அழிக்கலாமே, அந்தளவுக்கு திறமை இல்லாத இறைவனை எதற்கு கொண்டாட வேண்டும்???,அவருக்கு ஏன் நீங்கள் உதவி புரிய வேண்டும்?? ஏன் சக மனிதன் சாக வேண்டும்?? இந்த அளவுக்கு சம்பவங்கள் செய்து தான் உங்க மதத்தை பரப்ப வேண்டும் என்றால், உங்க மதம் என்ன இத்தாலி மாஃபியாவா ??? இப்படி உயிர்களை கொல்ல எந்த டேஷ் மதக்காரனுக்கும் உரிமை இல்லை. மற்றவர்களை கொன்றால் அது மதத்துக்கோ,எதுக்கோ இருந்தாலும் அவன் எவ்வளவு படித்திருந்தாலும், கற்கால காட்டுமிராண்டியே மனிதனில் சேர்த்தியே இல்லை 0
0
Reply
Rathna - Connecticut,இந்தியா
16 டிச,2025 - 17:16 Report Abuse
கோடியிலே நல்ல ஒண்ணு 0
0
Reply
உண்மை கசக்கும் - Chennai,இந்தியா
16 டிச,2025 - 13:02 Report Abuse
உண்மையில் இவர் நல்லவரா கெட்டவரா 0
0
Reply
Madras Madra - Chennai,இந்தியா
16 டிச,2025 - 12:55 Report Abuse
பாகிஸ்தானுக்கு ஆப்பு கூடிய விரைவில் இஸ்ரேல் சொருகும் 0
0
Reply
ram - mayiladuthurai,இந்தியா
16 டிச,2025 - 12:40 Report Abuse
இப்படித்தான் BAGALGAM தாக்குதல் பொது ஒரு குதிரை ஓட்டும் வண்டிக்காரனை அகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளினார்கள் அப்புறம் தெரிந்தது அவனும் அதில் ஈடுபட்டான் என்று, அதற்காக இவரை அவனுடனும் ஒப்பிடவில்லை 0
0
Reply
cpv s - ,இந்தியா
16 டிச,2025 - 12:29 Report Abuse
all are evil only except some people 0
0
Reply
Skywalker - ,
16 டிச,2025 - 12:09 Report Abuse
Salute to you brother al ahmed! You proved that there are even good people in islam, despite the brainwashed fanatic extremists jihadists 0
0
Reply
ASIATIC RAMESH - RAJAPALAYAM,இந்தியா
16 டிச,2025 - 12:07 Report Abuse
மிகவும் அரிதாக இப்படியும் சில நல்லவர்கள் இருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.... 0
0
Reply
மேலும்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்
-
ஜம்முவில் 30க்கும் மேற்பட்ட பாக் பயங்கரவாதிகள்; உளவுத்துறை எச்சரிக்கை
-
வங்கதேசத்தில் தொடரும் ஹிந்துக்கள் கொலை: அமெரிக்கா கண்டனம்
-
காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
-
தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்; ஒரே நாளில் 2.56 லட்சம் பேர் மனு
Advertisement
Advertisement