தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது; காங்., நிர்வாகி கருத்துக்கு அண்ணாமலை வரவேற்பு
சென்னை: தமிழகத்தின் கடனை திமுக இரட்டிப்பாக்கி உள்ளது என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தை விட தமிழக கடன் நிலைமை மோசமாகியுள்ளது. கடன் தொகை அதிகரித்துள்ளது என காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி கூறி இருந்தார். இதனை அண்ணாமலை வரவேற்று உள்ளார்.
அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: பொய் சொல்வதில் கோபாலபுரம் குடும்பம் முனைவர் பட்டம் பெற்றுள்ளது. இண்டி கூட்டணியில் உள்ள கூட்டாளிகளில் ஒருவர் தரவுகளைப் புரிந்து கொண்டு கடன் குறித்து பகிரங்கமாகப் பேசுவது வரவேற்கத்தக்கது.
வெறும் ஐந்து ஆண்டுகளில், திமுக தமிழகத்தின் கடனை இரட்டிப்பாக்கியுள்ளது, அதே நேரத்தில் பற்றாக்குறைகளை மறைப்பதற்கும், பெருகிய வளர்ச்சிக் கதைகளை முன்னிறுத்துவதற்கும் கடன்களை வசதியாகப் பயன்படுத்துகிறது.
இருப்பினும், பெரிய கேள்வி என்னவென்றால், திமுகவிற்கும் காங்கிரசுக்கும் இடையே உண்மையில் என்ன நடக்கிறது? ஐக்கிய முற்போக்கு கூட்டணி சகாப்தத்தின் மோதல், சண்டை மீண்டும் உருவாவது போல் தெரிகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசு பதினோரு ஆண்டுகளில் இந்தியாவின் கடன் ஐம்பது லட்சம் கோடியை இருநூறு லட்சம் கோடியாக நான்கு மடங்கு அதிகமாக்கியது இவருக்கு தெரியாமல் போனது ஏன்?
மகளிர் விடியல் பயணத்திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண், தமிழ்புதல்வன், முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம், கலைஞர் கனவு இல்லம், மக்களைத் தேடிமருத்துவம், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் என மக்களுக்கான திட்டங்களை வகுத்து சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறது
நீங்கள் படித்தவர் என்று தெளிவாக தெரிகிறது. உபியுடன் ஒப்பிடுவது தவறாக இருக்கட்டும். திமுக அரசு இந்த ஐந்து ஆண்டுகளில் வாங்கிய கடன் மட்டும் ரூபாய் ஐந்து லட்சம் கோடி. இந்த அரசு பதவியேற்பதற்கு முன்னாள் இத்தனை ஆண்டுகளில் வாங்கிய கடனே இவ்வளவுதான். சரி , வாங்கிய கடனை கொண்டு ஸ்டாலின் அரசு உள் கட்டமைப்பு வேலைகளில் செலவிட்டது 35% மட்டுமே Capital expenditure. மீதி, அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், இலவச திட்டங்கள் மூலம் ஓட்டு வங்கியை உருவாக்கவுமே செலவு செய்யப்பட்டிருக்கிறது அதாவது Revenue expenditure. அதாவது, மக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்து கடன் வாங்கி அன்றாட செலவுகளை செய்யும் இந்த அரசிற்கு படித்த நீங்கள் எப்படித்தான் வக்காலத்து வாங்குகிறீர்களோ?
உத்திர பிரதேசத்தை Compare செய்வதென்றால் எல்லா Metrics களிலும் செய்யவும் i.e. GDP, Health Index, Infrastructure, GDP Share by Central Government, Information Technology Developments, Disaster Fund by Central Government, AIIMS etc.
மத விஷயத்தில் நடுநிலை .. அதை விட்டுட்டீங்க . இங்க அது சுத்தமா கிடையாது .
சபாஷ். இது தான் சரியான போட்டி. இப்போது சொல்லுங்கள். உங்கள் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைந்தால், சாராயம், இலவசம் இல்லாமல், பொதுதுறை / அரசு துறை நஷ்டம் இல்லாமல், அரசு ஊழியருக்கு பஞ்சபடி / ஊதிய உயர்வு / சலுகைகள், ஓய்வூதியம் இல்லாமல் எப்படி நஷ்டம் இல்லாமல் அரசை நடத்தி காண்பிப்பீர்கள் ?
நல்ல கேள்வி தான் கேட்டிருக்கிறீர்கள். நாலே முக்கால் லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது எதற்காக அதற்கு என்ன செலவழித்தீர்கள். டாஸ்மாக் வருமானம் எவ்வளவு அதற்கு எவ்வளவு என்ன செலவழித்தீர்கள். திமுக தலைவர் கருணாநிதிக்கு சிலை வைக்க எவ்வளவு செலவழித்தீர்கள். சென்னையில் வடிகால் திட்டத்திற்கு 4000 கோடி ரூபாய்க்கு என்ன செலவழித்தீர்கள்.. இவ்வளவு கடன் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக இருப்பது ஏன் என்று சொல்லுங்கள். நெல்மணிகளை சேமிக்க கிட்டங்கி இல்லாமல் நனைந்து முளைத்து விட்டது அதற்கு என்ன சொல்கிறீர்கள் தமிழ்நாட்டுக்கு அத்தியாவாசிய தேவையான கார் ரேஸுக்கு எவ்வளவு செலவழித்தீர்கள்.. நீங்கள் அறிமுகப்படுத்திய உங்களுடன் ஸ்டாலின் நலம் காக்கும் ஸ்டாலின் உங்களைத் தேடி மருத்துவம் இன்னும் பல திட்டங்களுக்கு அறிமுகப்படுத்த எவ்வளவு கோடி செலவழித்தீர்கள். அரிசி விலை கிலோ கிட்டத்தட்ட 100 ரூபாயை எட்டிவிட்டது. சாதாரண கிராமங்களிலேயே இட்லி விலை ரூபாய் ௧௦.இன்னும் எவ்வளவோ இருக்கிறது. இதற்கெல்லாம் விடை தெரிந்தால் உங்கள் கேள்விகள் நியாயம் இருக்கிறது.
உபிக்கு அள்ளி அள்ளி கொடுக்கிறீர்கள்... தமிழகத்திற்கு தர வேண்டிய நிதிவை ஒழுங்காக கொடுத்தார் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வராது. இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி தமிழகம் தான் உற்பத்தியில் முதலிடம்
வரி என்பது நுகர்வோர் எந்த மாநிலத்தில் நுகர்வு செய்கின்றாரோ அதை வைத்து கணக்கீடு செய்யப்படும். உற்பத்தி செய்து அப்படியே வைத்துக்கொண்டால் யார் வரி காட்டுவர். உங்களை போன்றோர் உள்ளதால் தான் திராவிட கட்சிகள் மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகின்றன.
நம் எல்லாரும் கனவு காணலாம் அனல் உண்மியல் எல்லாம் தீய ஆட்சின் அவலம்
எதுக்கு நிதி , செம்மொழி பூங்கா , கலைஞ்சர் பேனா எல்லாம் கட்டவா . தர முடியாது .
A state will get benefitted only when the state government is in good terms with central government. Both MGR and Karunanidhi ensured that. For the past 15 years it is not happening.
2011-2014 : ADMK in state & Congress at Centre.
2014-2021: ADMK in state & BJP at Centre.
2021-2026: DMK in state & BJP at Centre.மேலும்
-
இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும்; மோகன் பாகவத் விருப்பம்
-
தி.மலையில் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு
-
யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென மக்களுக்கு தெரியும்: நடிகர் விஜய் பேச்சு
-
பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்: இபிஎஸ் மீண்டும் வலியுறுத்தல்
-
ஆப்பரேஷன் சிந்தூரில் பயத்தில் உறைந்த பாக்., தலைவர்கள்: அதிபர் சர்தாரி ஒப்புதல்
-
வளர்ச்சி அரசியலை புரிந்துகொள்ளாத ராகுல்; உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம்