காங்கிரஸ் வெறும் கட்சியல்ல: சொல்கிறார் ராகுல்
புதுடில்லி: '' காங்கிரஸ் என்பது வெறும் கட்சியல்ல. அது இந்தியாவின் ஆன்மாவாக திகழ்கிறது,'' என அக்கட்சி எம்பி ராகுல் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 140வது நிறுவன தினத்தை முன்னிட்டு ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: காங்கிரசின் நிறுவன தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டருக்கும் வாழ்த்துகள்.அந்த வரலாற்று பாரம்பரியத்துக்கும், இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர்களுக்கும், அரசியலமைப்பின் அடித்தளத்தை அமைத்து ஜனநாயகம், மதசார்பின்மை, சமூக நீதி மற்றும் சமத்துவத்தின் மதிப்புகளை வலுப்படுத்திய அந்த மாபெரும் தியாகிகளுக்கு நாங்கள் மரியாதை செலுத்துகிறோம்.
காங்கிரஸ் என்பது வெறும் அரசியல் கட்சியல்ல. அது இந்தியாவின் ஆன்மாவின் குரல். ஒவ்வொரு பலவீனமான, ஒவ்வொரு நலிந்த, ஒவ்வொரு கடின உழைப்புக்கும் துணை நிற்கிறது. வெறுப்பு, அநீதி மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராக உண்மை, தைரியம் மற்றும் அரசியலமைப்பின் பாதுகாப்பிற்காக இன்னும் வலுவாக போராட உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.
வெறும் கட்சி அல்ல. இந்தியாவை நாசம் செய்து அழிக்க நினைக்கும் பப்புவின் ஹைட்ரஜன் பாம். நீ தான் அதனால் அழிய நேரிடும்
வெறும் கட்சியில்லை....வெத்து கட்சி
அதாவது பிரிட்டிஷ் முகலாய அடிமை கட்சி.. சுதந்திரம் அடைந்த பின்னரும், அடிமைப் புத்தி தொடர்ந்து, சுல்தான் பாதுஷா ஸ்டைலில் ஒரு சில குடும்பங்கள் வாழ்ந்து மற்ற ஜனங்கள் பஞ்சை பராரிகளாகவே இருக்க வேலை பார்க்கும் தேச துரோகி அமைப்பு...
தீவிரவாத கட்சி
வெறும் கட்சி அல்ல இத்தாலி கட்சி
அரசியல் என்பது வெறும் ஆட்சி பதவியில் இருப்பது மட்டுமே அல்ல .ஒரு ஆக்கபூர்வமான ஆளுபவர்களுக்கு மக்கள் நல்வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வழிகாட்டும் அமைப்பு .அதைப்புரிந்துகொள்ளும் நிலைமையில் காங்கிரஸின் தலைமை இல்லை .தலைமை பொறுப்புள்ளவர்களுக்கு தன்னிச்சையாக அறிந்து புரிந்து நடக்கும் சுயமரியாதை இல்லை .ராகுல் என்பவர் மரியாதைக்குரிய மனிதர் என்றாலும் பதவி என்ற மனநோய் என்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மற்ற கீழ்மட்ட தலைவர்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் .காங்கிரஸ் சுமார் 60 ஆண்டுகாலமாக பதவியில் இருந்தபோதும் எதிர்கட்சிகளாக இருந்தவர்கள் இவரைபோன்று நடந்துகொள்ளவில்லை .ஒருவர் பிறந்த நாட்டை ஏன் தாய் நாடு என்கின்றோம் ? தன தாயையும் ,தான் பிறந்த நாட்டையும் ஓர் தராசில் இருதட்டுக்களாக பாவித்து சமமாக பாவிக்கவேண்டும் என்பதே .தாய் நாட்டை பற்றிய தவறாக பேசுவது தன் தாயை தானே இழிவுபடுத்துவது போன்றது .இதை புரிந்து கொள்ளும் அளவில் ராகுல் இல்லை .அதனால் அந்த தொற்று நோயிலிருந்து காங்கிரஸ் தீவிர சிகிச்சை பெற்று விடுதலை பெற கீழ்மட்ட தலைவர்கள் முயற்சித்து தன் தாயை போற்றிகாப்பது போல நாட்டிற்கு சேவை செய்யும் முயற்சிகளை செய்யவேண்டும் .வாஜிபாய் அவர்கள் சுமார் 60 ஆண்டுகாலம் பொறுமைகாத்தாரே .அவர் வெளிநாடுகாளுக்கெல்லாம் சென்று அரசை குறைசொல்லி வரவில்லையே .
காந்தி குடும்பம் நாடு வெளியேற்றப்படும் நாள் விரைவில் வரும்.
ஆமாம்
நம் தேசத்திற்கு எதிராக செயல்படும் வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டாளியும் கூட
இந்திய மானத்தை வெளிநாடுகளில் வாங்கும் கோஷ்டி!
உண்மை, அது அரசியல் கட்சி இல்லை, தற்போது அது வெறும் குடும்ப கட்சிமேலும்
-
வங்கதேசத்தில் ஹிந்து இளைஞர்கள் படுகொலை: ஓவைஸி கண்டனம்
-
நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக 13 லட்சம் பேர் பயன்!
-
இந்தியா விஸ்வகுருவாக மாற வேண்டும்; மோகன் பாகவத் விருப்பம்
-
தி.மலையில் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு
-
யாரை எந்த இடத்தில் வைக்க வேண்டுமென மக்களுக்கு தெரியும்: நடிகர் விஜய் பேச்சு
-
பொங்கல் பரிசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்: இபிஎஸ் மீண்டும் வலியுறுத்தல்