திருப்பரங்குன்ற வழக்கு நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது மன்னிக்க முடியாத செயல்: அவமதிப்பு வழக்கில் தலைமை செயலருக்கு நீதிபதி கண்டிப்பு
மதுரை: ''சட்டம் - ஒழுங்கு நிலைமையை காரணமாக கூறி, நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது ஏற்புடையதல்ல. அது முற்றிலும் மன்னிக்க முடியாத செயலாகும். அது, சட்டம் - ஒழுங்கு சீர்குலைய வழிவகுக்கும். அரசியலமைப்பு இயந்திரத்தை முடக்க இட்டுச் செல்லும்,'' என, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறினார்.
மதுரை மாவட்டம் எழுமலை ராம ரவிகுமார் ஏற்கனவே தாக்கல் செய்த ரிட் மனு அடிப்படையில், டிச., 1ல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில், 'திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணிலும், டிச., 3ல் கார்த்திகை தீபத்தை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் ஏற்ற வேண்டும்' என குறிப்பிட்டார்.
மேல்முறையீட்டு மனு
ராம ரவிகுமார், 'நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் கலெக்டர், போலீஸ் கமிஷனர், கோவில் செயல் அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என, மனு தாக்கல் செய்தார்.
இதை அவசர வழக்காக டிச., 3ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அரசு தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஜி .ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, டிச., 4ல் தள்ளுபடி செய்தது.
அறிக்கை சமர்ப்பிப்பு
இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, டிச., 4ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'கார்த்திகை தீபத்தை தீபத்துாணில் ஏற்ற வேண்டும். போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டார்.
டிச., 9ல் விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், 'மீண்டும் இந்த நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. மனுதாரர் தரப்பை மலையேற அனுமதிக்கவில்லை. திருப்பரங்குன்றத்தில் சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை செல்ல விடாமல் போலீசாருடன் கமிஷனர் தடுத்ததாக துணை கமாண்டன்ட் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்'
'எனவே, தமிழக அரசின் தலைமை செயலர், சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., ஆகியோர் டிச., 17ல் காணொலி மூலம் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார்.அந்த வழக்கை நேற்று மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.
தலைமைச் செயலர்: முருகானந்தம், ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் காணொலியில் ஆஜராகினர்.
கலெக்டர் பிரவீன்குமார், போலீஸ் கமிஷனர் லோகநாதன், போலீஸ் துணை கமிஷனர் இனிகோ திவ்யன், கோவில் செயல் அலுவலர் யக்ஞநாராயணன் நேரில் ஆஜராகினர்.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கார்த்திகேயன், பழனிவேல்ராஜன், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் ரவீந்திரன், வீரா.கதிரவன், மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் ஆஜராகினர்.
தலைமைச் செயலர்: நீதிமன்ற உத்தரவிற்கு மரியாதை தருகிறோம். நிறைவேற்றக்கூடாது என எந்த உள்நோக் கமும் இல்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்னை , குழப்பமான சூழலில் மேல் முறையீடு செய்யப்படுகிறது. எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தேவை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
திருப்பரங்குன்றம் விவகாரம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் மற்றொரு வழக்கில், சம்பந்தப்பட்ட இடத்தில் தடை உத்தரவுகளை கலெக்டர்கள் தாங்களாகவே பிறப்பித்தனரா அல்லது அறிவுறுத்தல்களின் படி பிறப்பித்தனரா என்பதை தெளிவுபடுத்த தலைமைச் செயலர் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
நிறைவேற்ற வேண்டும்
மற்றொரு வழக்கும் தலைமைச் செயலரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அவ்வழக்கிலும், சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணமாக கூறி, திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் அருகே ஆலமரத்துப்பட்டியில் ஒரு சட்ட விரோத சர்ச் கட்டுமானத்திற்கு எதிராக வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினர்.
அந்த வழக்கிலும் நான் பிறப்பித்த தடை உத்தரவை அரசு தரப்பில் நிறைவேற்றவில்லை. அந்த வழக்கு, இன்று (டிச., 18) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆத்துார் தாசில்தார், 'நீதிமன்ற தடை உத்தரவை அமல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட இடத்தில் எதிர்ப்பு நிலவுகிறது. சட்டம்- - ஒழுங்கு பிரச்னை காரணமாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியவில்லை' என அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
சர்ச் கட்டுமானம் சட்டவிரோதமானது. அதிகாரிகள் தாங்களாகவே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை.
ஆனால், கட்டுமானம் தொடர்கிறது. அந்த இடம் வழிபாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. அதனால் தான், உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.
ஆனால், அதிகாரிகள் அக்கட்டடத்தை தொட்டுக்கூட பார்க்கவில்லை. அதிகாரிகள் ஏன் தயங்குகின்றனர் என்பது குறித்து ஒரு முடிவிற்கு வர வேண்டியுள்ளது.
நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்து, அதற்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதிக்காமல் அல்லது அது ரத்து செய்யாமல் இருந்தால், அதை கண்டிப்பாக நிறைவேற்ற வேண்டும்.
ஒத்திவைப்பு
சட்டம் - ஒழுங்கு நிலைமையை காரணமாகக் கூறி, நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவது ஏற்புடையதல்ல. அது முற்றிலும் மன்னிக்க முடியாத செயலாகும். அது சட்டம் - ஒழுங்கு சீர்குலைய வழிவகுக்கும். அது, அரசியலமைப்பு இயந்திரத்தை முடக்கும். இந்த வழக்கின் விசாரணை வரும் ஜன., 9க்கு ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டார்.
@block_B@
திருப்பரங்குன்றம் தீபத்துாண் வழக்கில், உயர் நீதிமன்ற அமர்வு முன் நேற்று முன்தினம் ஆஜரான உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங், 'தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தேர்தலில் போட்டியிட தயாராகி கொண்டிருக்கிறார்' என்று குறிப்பிட்டார். இந்நிலையில், நேற்று தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமி நாதனிடம் அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அதில் தமிழக அரசு சார்பில், காணொலியில் வாதாட முயன்றார் விகாஸ் சிங். அப்போது நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கூறியது: நேற்று முன்தினம் தீபத்துாண் ரிட் மேல் முறையீட்டு வழக்கு, இரு நீதிபதிகள் அமர்வில் வந்த போது, வாதத்தில் என்னைப் பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். நாளிதழ்கள் படித்து அறிந்து கொண்டேன். இதற்கு விளக்கம் தேவை. தற்போது தங்களிடம் பேச வாய்ப்பில்லை. தலைமைச் செயலரின் கருத்தை அறிய வேண்டியுள்ளது. அதுவரை காத்திருக்கவும். உங்கள் ஆடியோவை 'மியூட்' செய்து விடுங்கள். இவ்வாறு குறிப்பிட்ட நீதிபதி, தலைமை செயலரிடம் விசாரணையை தொடர்ந்தார்.block_B
தற்பொழுது தமிழக அரசு இந்து விரோத அரசாக திகழ்கிறது திராவிட முன்னேற்ற கழகம் அரசு சிறுபான்மையினரை மட்டுமே ஓட்டு வாங்கி காக பயன்படுத்திக் கொண்டு பெரும்பான்மைனரின் கோயில் வழிபாட்டு உரிமையை தருகிறது இந்துக்கள் தங்களது தெய்வங்களை வழிபட அனுமதிப்பதில்லை தற்போது செயல்படும் திமுக அரசு சிறுபான்மையினரை மட்டுமே கண்டு கொண்டு பெரும்பான்மையிரை கண்டு கொள்வதில்லை மதசார்பற்ற நாடு இந்தியா எந்த மதத்திற்கும் அரசு சாராமல் இருப்பதே அதன் நல்லது ஆனால் தற்போது திமுக அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து அவர்களுக்கு மட்டுமே பல சலுகைகள் செய்து வருகிறது கோயில் உண்டியலில் அரசு செலவுக்கு எடுத்து இந்துக்கள் நலனில் அக்கறை கொள்வதில்லை
தமிழ்நாடு அரசு, அதிகாரிகள், மக்களாட்சி வழிநடத்த தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் முற்றிலும் இந்துமத விரோதமாக, நீதிமன்ற ஆணைகள், வழிகாட்டுதல்கள் நிறைவேற்றாமல் செயல்படுகின்றனர். எனவே இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும். அரசியல் சார்பு செயல்படும் அதிகாரிகள் பணியிலிருந்து நீக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட வேண்டும். முதலில் சட்டத்தின் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும்.
தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது அரசின் கடமை.அதே நேரம் அந்த தீர்ப்பின் சாரம் மக்கள் மத்தியில் என்ன விளைவு ஏற்படுத்தும் என்பதையும் கவனிக்க வேண்டும் அரசு.
மிகவும் பயனுள்ளதாக இருந்தது வாழ்த்துக்கள்
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் செயல்பட்ட தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் இவர்கள் அனைவரும் முதலமைச்சருக்கு தெரியாமல் சட்டம் ஏற்ற முடியுமா
பூரண சந்திரனை தற்கொலைக்கு தூண்டியதற்காக, மேற்கண்ட அனைவருக்கும் உரிய செக்சன் படி தண்டனை வழங்க வேண்டும். காவல் துறையை கையில் வைத்துகொண்டு தடுத்த முதல்வருக்கும் இதே தண்டனை வழங்க வேண்டும். நீதி நிலைக்க வேண்டும். நீதிமன்றம் மாண்பு காக்க வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே, சாதாரண மக்களுக்கு நீதிமன்றம் மீது நம்பிக்கை, நன்மதிப்பு ஏற்படும்.
ஓட்டுவங்கிக்காக வேண்டி பிற இனத்தை காக்க, இந்துக்களின் மத நம்பிக்கையை ,உணர்வுகளை எந்த மாநில அரசும் நசுக்கக்கூடாது
கமிஷனர் பட்டங்கள் மற்றும் பதவிகளை பறித்துவிடவும் அவருடைய ஆதார் மற்றும் பான் நம்பரை முதலியார் வேண்டும் பஃ சேட்டலெமென்ட் செய்ய கூடாது
இவ்வாறு அரசு அதிகாரிகளுக்கு அவகாசம் அளிப்பதால் இந்த நாடு நாசமாக போய் கொண்டுள்ளது. குறைந்த பட்சம் கோயில் செயல் அலுவலருக்காவது 1 வாரம் சிறை தண்டனை விதிக்க வேண்டும்.
மன்னிக்க முடியாத செயல் என்று கூறியபிறகு மீண்டும் ஏன் மற்றொரு தேதிக்கு ஒத்திவைப்பு செய்கிறார்கள்? உடனே தீர்ப்பை அளித்து சட்டத்தை மதிக்காத அவர்களை சிறையில் தள்ளவேண்டியதுதானே? அவர்களின் எந்த விளக்கம் செய்த குற்றத்தை இல்லாமல் ஆக்கிவிடும்? நேரம் கொடுக்க கொடுக்க விசயம் நீர்த்துப்போகும். அதுதான் நோக்கமா?மேலும்
-
ரஷ்யாவில் குண்டுவெடிப்பு: போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி
-
31 ஏக்கர் நிலம், 1 கிலோ தங்கம்... மொத்தம் ரூ.100 கோடி சொத்து; வசமாக சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர்
-
பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு
-
ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்
-
ஜீவகாருண்யத்திற்கு முளை்த்த சிறகுகள்
-
வங்கதேச தேர்தலில் ஜெயிக்க சதி: முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டு