சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தம்; அதிமுக-பாஜ தொகுதி பங்கீடு பேச்சு
நமது நிருபர்


தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசாரம் என அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர்.
வரவேற்பு
அந்தவகையில், மத்திய அமைச்சரும், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ்கோயல் சென்னை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பாஜ நிர்வாகிகள் பியூஷ் கோயலை பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
சந்திப்பு
பின்னர், சென்னையில் தனியார் ஹோட்டலில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் பியூஷ் கோயல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்தினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஆலோசனை
இதில் பாஜ போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுக நிர்வாகிகள் வசம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிகிறது. கூட்டணி பலப்படுத்துவது, புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பியூஷ் கோயல் இபிஎஸ் உடன் பேசியதாக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
மையக்குழு கூட்டம்
முன்னதாக, சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜவின் மையக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் பியூஷ்கோயல், இணை பொறுப்பாளர் அர்ஜூன் ராம் மேக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்தது.
பேச்சுவார்த்தை முடிந்து கிளம்பிய தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களிடம்,' முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது' எனத் தெரிவித்தார்.
மாலையில்…!
தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கிண்டியில் இன்று மாலை கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்.
திருப்பரங்குன்ற தீப பிரச்சைக்கு முன் திருப்பரங்குன்ற தீப பிரச்சனைக்கு பின் என இரணடாக பிரித்து மக்களிடையே நன்றாக விமர்சனம் செய்து திருப்பரங்குன்றத்தில் இந்த கூட்டணி நன்றாக சிரித்து மக்களை திரட்டினால் அது திருத்தணி மலை வரை எதிரொலிக்கும் முருகனின் வேலாயுதம் ஒன்றே போதும் திராவிட மாடல், அரசை வீழ்த்திட இயலும்
This is the last election for AIADMK and Annamalai ji take over soon
சொம்பை அடிக்கிற ஆளுக்கு கண்டதை பேசும் திருவாய் தான் தேவையில்லாத ஆணி .
வரப்போற தேர்தல்ல எவனுக்கும் பெரும்பான்மை கிடைக்காம எல்லாவனும் வவ்வால் மாதிரி தலைகீழா தொங்கப்போறானுங்க. தலையபிச்சிகினு பைத்தியம்பிடிச்சி சாவட்டும் எல்லாவனும்.. அதிலயும் அந்த டோப்பா விக்கு தலையன் கெடந்து உருளட்டும்.. மீண்டும் கழக ஆட்சியாம்... ஆச தோச அப்பள வட .....
அண்ணாமலை எப்ப வரணமோ அப்பா சரியாக வருவார்
எடப்பாடி, அண்ணாமலை யை கூட சேர்த்து பிரசாரம் பண்ணினால் தான் இந்த கூட்டணி நல்லா ஜெயிக்கும்.
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றி பெற்றாலும் தேர்தலில் தோல்வி அடைவார்கள். போதாக்குறைக்கு விஜய் திமுக எதிர்ப்பு ஓட்டை பிரிப்பார் .
good
யார் எப்படி பேசினாலும் இந்த அதிமுக பிஜேபி கூட்டணியை ஜெயிக்க அதிகம் உழைப்பது தீயமூகவும்
அதன் வாகு வங்கி போலி மதசார்பற்ற கொள்கையும் தான் , இனி தமிழக அரசியலை திருப்பரங்குன்ற தீப பிரச்சைக்கு முன் திருப்பரங்குன்ற தீப பிரச்சனைக்கு பின் என இரணடாக பிரித்து தான் விமரிசனம் செய்ய வேண்டும் எந்த தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு அது போன்று இந்த திருப்பரங்குன்ற தீப பிரச்சனை மூலம் பிஜேபி இன் பத்து ஆண்டுகால உழைப்பை மிச்சப்படுத்தி உள்ளது தீயமூக .... கோடான கோடி நன்றி ஏசப்பா .....
திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்று சக்தியாக அண்ணாமலையால் பிஜேபியை உருவாக்க முடியும். அண்ணாமலையை ஒதுக்கி விட்டு பதவி ஆசைக்காக சில தமிழக பாஜக தலைவர்கள் எடப்பாடியிடம் பாஜகவை அடகு வைக்கின்றனர். எடப்பாடிக்கான ஆதரவு வாக்குகள் சரிந்து விட்டன. திமுக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்க விஜயும் சீமானும் உள்ளனர். ஆக, தீய சக்திக்கே மீண்டும் வெல்ல அதிக வாய்ப்பு போல உள்ளது.
உண்மையில் எடப்பாடி கிங் தான் , இந்த சைடு அந்த ஆள் தென்படக்கூடாது என்று சொல்லி விரட்டி இறுக்கிறார் என்றால் சூப்பர் , அண்ணாமலை சாப்டர் கிளோஸ் ஐவரும் கிளோஸ்மேலும்
-
ரஷ்யாவில் குண்டுவெடிப்பு: போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி
-
31 ஏக்கர் நிலம், 1 கிலோ தங்கம்... மொத்தம் ரூ.100 கோடி சொத்து; வசமாக சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர்
-
பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு
-
ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்
-
ஜீவகாருண்யத்திற்கு முளை்த்த சிறகுகள்
-
வங்கதேச தேர்தலில் ஜெயிக்க சதி: முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டு