திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற விடமாட்டோம்: திருமாவளவன் பேச்சு
மதுரை: ''மலையில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றும் பிரச்னையில் திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்ற விடமாட்டோம்'' என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசினார்.
மதுரை பழங்காநத்தத்தில், திருப்பரங்குன்றம் பிரச்னையில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி வி.சி.க., சார்பில் ஆர்ப்பாடம் நடந்தது. இதில் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
திருப்பரங்குன்றம் பிரச்னையை பேச எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்கின்றனர். நான் இந்த மண்ணின் மைந்தன் என்பதே போதுமான தகுதி. தமிழகத்திலும், தி.மு.க., அரசை எதிர்த்துப் போராடவும் எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. பா.ஜ.,வோ, ஹிந்துஅமைப்புகளோ எளியமக்களுக்காக போராடியதுண்டா. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தி.மு.க., கூட்டணி கட்சிகள் போராடியதால்தானே 10 ஆண்டுக்குப் பின் பணிகள் துவங்கியுள்ளது.
நாங்கள் மதநல்லிணக்கத்தை விரும்புகிறோம். இங்குள்ள சிறுபான்மையினர் எங்கள் சொந்தங்கள். அவர்களை அச்சுறுத்தப் பார்க்கிறது சங்பரிவார் கும்பல். மொழிக்காக தீக்குளித்தவர்கள் உண்டு. ஆனால் மதவெறியை துாண்டி பூர்ணசந்திரனை தீக்குளிக்க வைத்தது ஆர்.எஸ்.எஸ்.,கும்பல். இங்கு ஜனநாயக சக்திகள் பெரும்பான்மையாக உள்ளோம். அதனால் திருப்பரங்குன்றத்தை அயோத்தி போல மாற்ற முடியாது. அதற்கு விடவும் மாட்டோம்.
எல்லா துறைகளிலும் சங்கிகள் குறிப்பாக நீதித்துறை, காவல்துறை, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பல வடிவங்களில் சங்கிகள் உள்ளனர். இங்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் சுவாமிநாதன் வடிவத்தில் சங்கி உள்ளனர். தி.மு.க., ஒரு தீயசக்தி என்று புதிதாக கட்சி துவக்கிய விஜய் சொல்கிறார். இதனால் நீங்கள் தி.மு.க.,வை வீழ்த்த நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்காக கட்சி தொடங்கியுள்ளீர்கள் எனப்புரிகிறது.
எங்களுக்கென கொள்கைகள் இருக்கிறது. எங்கள் கொள்கையோடு ஒத்துப்போவதால்தான் நாங்கள் தி.மு.க.,வோடு இருக்கிறோம். ஆனால் சீமானும், விஜயும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.,வின் பிள்ளைகள் என்பது அம்பலமாகி இருக்கிறது. இது தெரிந்தும் தி.மு.க..வினர் கூட வாய்மூடி மவுனியாக இருக்கலாம். ஆனால் சமூகநீதி பேசும் அம்பேத்கர் கொள்கைகளை கடைபிடிக்கும் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்.
எங்களுக்கு பதவி ஆசை இல்லை. கூட்டணி கட்சியில் கிடைக்கும் 2, 4 சீட்கள் எங்களுக்கு முக்கியமில்லை. எங்களுக்கு கொள்கை, கோட்பாடுதான் முக்கியம். மதச்சார்பின்மை, அம்பேத்கர் கொள்கைக்கு எதிரிகள் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ., என்பதால் எதிர்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
அப்படியாப்பா, அப்படியே கொஞ்சம் திரும்புங்க, ஒரு பிளாஷ்பேக். வன்னியர் கட்சி, வைகோ கட்சி, ஹிந்தி போராட்டத்தில் தி.மு.க. கட்சி போன்றவை, தொண்டர்கள் பெயரில் தீக்குளித்த வரலாறு உண்டா இல்லையா ?? ஆமாவா இல்லையா ?? சாராயம் குடித்து மற்றும் ஆணவ கொலையில் உயிர் விட்டவர் உங்கள் கட்சியில் உண்டா இல்லையா ?? உங்களுக்கு வயதாகிவிட்டது. செலெக்ட்டிவ் அம்னீஷியா வந்துவிட்டது. அரசியலை விட்டு ஒதுங்குவது நலம்.
, சில பெட்டிக்காக ஹிந்துவை இழித்து பேசுவதா , தமிழக ஹிந்துக்களே 2026ல் ஒன்று பட்டு ஹிந்து விரோதிகளை அடித்து விரட்ட வேண்டும்
வரும் தேர்தலில் விரட்டியடிப்போம் தமிழகத்தை விட்டு
துரத்த ஒரு நிமிடம் ஆகாது
பல்லாயிரம் ஆண்டுகளாக முருகன் இருந்தான். இருக்கிறான், இன்னும் இருப்பான். ஆக்கிரமிக்க வந்தவர்கள் மொத்தமும் எங்களுக்கு சொந்தம் என்று சொல்ல வேறு குழுக்கள் முயலும் பொழுது எதுவும் அவர்களுக்கு இல்லை என்ற நிலை கூட வரலாம்.
வேறு மதத்தினர் இது போன்ற ஆக்கிரமிப்புகளை ஏற்றுக்கொள்வார்களா என்பதையும் சிந்திக்க வேண்டும்.
வெள்ளைக்காரர்களுக்கு இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்ற ஆசையில் இது போல சிக்கல்களை உருவாக்கி விட்டு சென்றார்கள்.
மக்கள் யாரும் காதில் வாங்கிக்கொள்ளக்கூடாது. வேண்டுமென்றால் முருக பக்தர்கள் அனைவரும் ஆயுதத்தை கையில் எடுங்கள்.
எல்லாம் பார்த்தாலே வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுது...
ஒன்றிரண்டு சீட்டுக்காக இப்படியெல்லாம் பேசுகிறார் திருமாவளவன்
மிக பெரிய மதக்கலவரம் நிகழாமல் இருக்க முருகனை பிரார்த்திப்போம்.
தமிழ்நாடு தமிழ்க்கடவுள் முருகனுக்குச் சொந்தம். திருப்பரங்குன்றம் முருகனுக்குச் சொந்தம். ஓட்டுக்கு பிச்சை எடுக்கும் வேடதாரி உனக்கு பிடிக்கவில்லை என்றால் வெளியேறு.மேலும்
-
நெகிழி கழிவுகளை அகற்றிய மாணவர்கள்
-
காளாஞ்சிபட்டி பயிற்சி மையத்தில் பயின்று குரூப் 4 தேர்வில் தேர்ச்சி அமைச்சர் பாராட்டினார்
-
மறியல் போராட்டம் சி.ஐ.டி.யு.வினர் கைது
-
இருளில் மூழ்கிய திண்டுக்கல் புறநகர், நுழைவு பகுதிகள் தவியாய் தவிக்கும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள்
-
ஊட்டியில் ரூ. 1.85 கோடி மதிப்பீட்டில் சறுக்கு விளையாட்டு பூங்கா
-
மூலிகை தோட்டத்தில் தியான மண்டபம்; யோகா செய்ய பயணிகளுக்கு அனுமதி