ஊட்டியில் ரூ. 1.85 கோடி மதிப்பீட்டில் சறுக்கு விளையாட்டு பூங்கா

ஊட்டி: ஊட்டி பட்பயர் பகுதியில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உருளை சறுக்கு விளையாட்டு பூங்கா பணி துவக்கப்பட்டது.

ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட பட்பயர் பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலப்பரப்பில், 1.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருளை சறுக்கு விளையாட்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதில், உருளை சறுக்கு விளையாட்டு பூங்காவில் மாணவர்கள் சர்வதேச உருளை சறுக்கு போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில், 110 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் அகலம் கொண்ட உருளை சறுக்கு விளையாட்டு அமைக்கப்படுகிறது. இதற்கான பணியை, நீலகிரி எம்.பி., ராஜா துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், ஊட்டி எம்.எல்.ஏ., கணேஷ், கலெக்டர் லட்சுமி பவ்யா மற்றும் கூடுதல் கலெக்டர் அபிலாஷா கவுர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement