மறியல் போராட்டம் சி.ஐ.டி.யு.வினர் கைது

திருப்பூர்: தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வலியுறுத்தி, தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட சி.ஐ.டி.யு., வினர், 420 பேரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு, 29 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை சுருக்கி, நான்கு சட்ட தொகுப்புகளாக கடந்த மாதம், 21ம் தேதி அமல்படுத்தியது. இவை தொழிலாளர்களின் உரிமைகளை பறிப்பதாக கூறியும், திரும்ப பெற வலியுறுத்தியும், தொழிற்சங்கம் சார்பில், மாநிலம் முழுதும் மறியல் போராட்டம் நேற்று நடந்தது.

அவ்வகையில், சி.ஐ.டி.யு. சார்பில், திருப்பூர் குமரன் சிலை முன் போராட்டத்தில் ஈடுபட திரண்டனர். அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்ட தொழிற்சங்கத்தினர், நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியடி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ரங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சம்பத், துணை தலைவர் உன்னி கிருஷ்ணன், பொருளாளர் கந்தசாமி, மாநிலக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, சித்ரா உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட, 420 பேரை போலீசார் கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

Advertisement