சுயதொழில் பொருள் விற்பனையகம் ரூ.33 லட்சத்தில் துவக்கம்

மடிப்பாக்கம்: பெருங்குடி மண்டலம், வார்டு 188க்கு உட்பட்டது மடிப்பாக்கம். இங்கு, 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மகளிர் சுயதொழில் உற்பத்தி பொருட்கள் விற்பனையகம் அடங்கிய பல்நோக்கு கட்டட பணி, நேற்று காலை 11:00 மணிக்கு, பூமி பூஜையுடன் துவங்கியது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:

மடிப்பாக்கம் பகுதியில் நுாலகம் அமைக்க வேண்டும் என, பொது மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதன்படி, மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில், பொது மக்கள் பயனடையும் வகையில், குறிப்பாக பெண்கள் தாங்கள் சுயமாக தயாரித்த பொருட்களை, தாங்களே நேரடியாக விற்பனை செய்யும் மையம் கட்ட முடிவானது.

அதனுடன், நுாலகம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கான பல்நோக்கு கட்டடம், 1,000 சதுர அடி பரப்பளவில், கவுன்சிலரின் மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement