வணிகர் சங்கம் பேரமைப்பு முப்பெரும் விழா கோலாகலம்
அவிநாசி: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், திருமுருகன்பூண்டியில், அனைத்து வியாபாரிகள் நலச்சங்கம், புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு, உறுப்பினர் சான்றிதழ் என முப்பெரும் விழா நடைபெற்றது.
அனைத்து வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநகர தலைவர் ஜான் வல்தாரீஸ், கவுரவ தலைவர் ராஜா, கவுரவ ஆலோசகர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். செயலாளர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
விழாவில்,அகில இந்திய வணிகர்கள் சம்மேளன மாநிலத் தலைவர் விக்கிரமராஜா பேசுகையில், ''பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் எந்தவித முன்னறிவிப்பின்றி அரசு அதிகாரிகள் வணிகர்களின் கடைகளில் சோதனை நடத்துகின்றனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்,பாலிதீன் ஆகியவை உபயோகப்படுத்துவதாக கூறி ஆயிரக்கணக்கில் அபராதம் விதித்து வருகின்றனர். இதனால், வணிகர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்த பிரச்சனைக்கு வரும் காலங்களில் உரிய தீர்வு எடுக்கப்படும்,'' என்றார். சங்க பொருளாளர் அப்பாஸ் நன்றி கூறினார்.
மேலும்
-
ரஷ்யாவில் குண்டுவெடிப்பு: போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி
-
31 ஏக்கர் நிலம், 1 கிலோ தங்கம்... மொத்தம் ரூ.100 கோடி சொத்து; வசமாக சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர்
-
பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு
-
ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்
-
ஜீவகாருண்யத்திற்கு முளை்த்த சிறகுகள்
-
வங்கதேச தேர்தலில் ஜெயிக்க சதி: முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டு