இந்திய தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு; வில்லியம்சனுக்கு வாய்ப்பு மறுப்பு

புதுடில்லி: அடுத்த மாதம் நடக்கவிருக்கும் இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


நியூசிலாந்து அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜன.,11ம் தேதி தொடங்க இருக்கிறது. 2026ம் ஆண்டில் இந்திய அணி விளையாடப் போகும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுவாகும்.
நியூசிலாந்து தொடர் மற்றும் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கும் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.


இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க இருக்கும் நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் அணியில் இடம்பிடிக்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ஒருநாள் தொடருக்கான அணி விபரம்;

மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), வில் யங், டெவோன் கான்வே, க்ளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜெடன் லெனாக்ஸ், ஹென்றி நிக்கோல்ஸ், ஜேக் போல்க்ஸ், கைல் ஜேமிசன், கிரிஸ்டியன் கிளார்க், ஆதி அசோக், ஜோஷ் கிளார்க்சன், மிட்ச் ஹே, நிக் கெல்லி, மைக்கேல் ரே, ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


டி20 தொடருக்கான அணி விபரம்;

மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), டெவோன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, மார்க் சேப்மன், க்ளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், ஜேக்கப் டபி, ஜேக் போல்க்ஸ், மேட் ஹென்றி, கைல் ஜேமிசன், பெவன் ஜேக்கப்ஸ், டிம் ராபின்சன், சோதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement