152 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கிய அமைச்சர்
சேலம்: சேலம், கன்னங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவியருக்கு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், நேற்று சைக்கிள் வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மாவட்டத்தில், 2025 - 26 கல்வி ஆண்டிற்கான சைக்கிள் வழங்கும் திட்டத்தில், அரசு, அதன் உதவி பெறும், 178 பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும், 25,159 பேருக்கு சைக்கிள் வழங்கப்படுகிறது. அதில் தற்போது கன்னங்குறிச்சி அரசு பள்ளியில், 100 மாணவர், 52 மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.
மேலும் மோட்டாங்குறிச்சி, கேசவன் நகர், டி.கே.வெங்கடாஜலம் தெரு உள்ளிட்ட பகுதிகளில், கலைஞர் மேம்பாட்டு திட்டத்தில், 1.05 கோடி ரூபாயில் தார்ச்சாலை, கழிவுநீர் கால்வாய் பணிக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. .கொண்டப்பநாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தால் நடத்தப்படும் பெரியார் நகர் ரேஷன் கடைக்கு, சேலம் வடக்கு தொகுதி, எம்.எல்.ஏ., நிதி, 15 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட புது கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி, கூடுதல் கலெக்டர் பொன்மணி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ராஜ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
ரஷ்யாவில் குண்டுவெடிப்பு: போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி
-
31 ஏக்கர் நிலம், 1 கிலோ தங்கம்... மொத்தம் ரூ.100 கோடி சொத்து; வசமாக சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர்
-
பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு
-
ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்
-
ஜீவகாருண்யத்திற்கு முளை்த்த சிறகுகள்
-
வங்கதேச தேர்தலில் ஜெயிக்க சதி: முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டு