கோவில் மேற்கூரை இடிப்பு; தாசில்தாரிடம் மனு வழங்கல்

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி சுவேத நதியை ஒட்டி, ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்ற கோவில் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த சூர்யா உள்ளிட்டோர், பாதையில் இடையூறாக உள்ளதாக கூறி, பொக்லைன் மூலம் கோவில் மேற்கூரையை அகற்றினர். இதனால் மக்கள், சாலை மறியலில் ஈடுபட்ட முயன்றதால், பொக்லைன் வாகனத்தை, போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் நேற்று ஆணையாம்பட்டி மக்கள், கோவில் மேற்கூரை இடித்தது குறித்து, தாசில்தார் நாகலட்சுமியிடம் மனு அளித்தனர். அதற்கு அவர், 'ஆற்றின் பகுதியில் கோவில் உள்ளது. இடையூறு இல்லாத இடத்தில் கோவில் அமைக்க, உரிய இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கூரையை இடித்தவர்கள் மூலம், புது இடத்தில் அமைக்கும் கோவிலுக்கு மேற்கூரை அமைத்து கொடுக்கப்படும்' என்றார். இதை ஏற்று மக்கள் சென்றனர்.

Advertisement