பின்வாங்கிய தி.மு.க., காங்., ஆர்ப்பாட்டம்

ஓமலுார்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்ட பெயரை மாற்றியதை கண்டித்து, ஓமலுார் தாலுகா அலுவலகம் முன், காங்., கட்சியினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வட்டார தலைவர் மணி தலைமையில் பலர், மத்திய அரசை கண்டித்து சிறிது நேரம் கோஷம் எழுப்பிவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஓமலுார் நகர தி.மு.க., சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தலாம் என அழைப்பு விடுத்தனர். காங்., சார்பில் பங்கேற்றோம். திடீரென தி.மு.க.,வினர், 'ஓமலுார் பஸ் ஸ்டாண்டில் கூட்டம் உள்ளது. நாளை(இன்று) 'இண்டியா' கூட்டணி சார்பில், மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்' என கூறி, திடீரென பின்வாங்கினர். நாங்கள் வந்துவிட்டதால் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement