மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு
வாழப்பாடி: வாழப்பாடி, அய்யாகவுண்டர் தெருவை சேர்ந்த, பெரிய தம்பி மகள் லதா, 25. வாய் பேச முடியாத நிலையில், சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த, 19 இரவு வீட்டில் இருந்து மாயமானார்.
அவரது தாய் கவிதா புகார்படி, வாழப்பாடி போலீசார் தேடினர். இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, மறுவாழ்வு மையத்தில் இருந்த அப்பெண், நேற்று மீட்கப்பட்டார்.
இதுகுறித்து, வாழப்பாடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் கூறியதாவது: சேலம், அன்னதானப்பட்டியில், வாய் பேச முடியாமல் நின்றிருந்த லதாவை, அன்னதானப்பட்டி போலீசார் மீட்டு, 'லிட்டில் ஹார்ட்ஸ்' எனும் மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார். இந்நிலையில் காலைக்கதிர் நாளிதழில் வெளியான செய்தியை பார்த்த அன்னதானப்பட்டி போலீசார், அப்பெண்ணின் தகவலை, எங்களுக்கு தெரிவித்தனர். தொடர்ந்து லதா மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ரஷ்யாவில் குண்டுவெடிப்பு: போலீஸ் அதிகாரி உள்ளிட்ட 3 பேர் பலி
-
31 ஏக்கர் நிலம், 1 கிலோ தங்கம்... மொத்தம் ரூ.100 கோடி சொத்து; வசமாக சிக்கிய போக்குவரத்து துணை ஆணையர்
-
பகையை மறந்து ஒன்று சேர்ந்த தாக்கரே சகோதரர்கள்; மஹா., உள்ளாட்சி தேர்தலுக்கு கூட்டணி அறிவிப்பு
-
ஈவெராவும் ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை வேஷமும்: போட்டுத் தாக்கிய இஸ்லாமிய பெண்
-
ஜீவகாருண்யத்திற்கு முளை்த்த சிறகுகள்
-
வங்கதேச தேர்தலில் ஜெயிக்க சதி: முகமது யூனுஸ் மீது குற்றச்சாட்டு